மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் மே 8-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.   இதனைக் காண ரூ. 200 மற்றும் ரூ. 500 என இரு வகையான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஏப்ரல் 29 முதல் மே 2-ஆம் தேதி வரை இவற்றை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மதுரை சித்திரைத் திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து வரும் மே 8ம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   மே 12ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடக்க உள்ளது என மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று சித்திரைத் திருவிழா குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மீனாட்சி திருக்கல்யாணத்தைக் காண 13,600 பேருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.   மேலும், […]

Read More

மதுரையில் தனியாக வாழ்ந்து வந்த மணிகண்டனுக்கு அந்த பகுதியை சேர்ந்த தன்னை விட 10 வயது மூத்த பெண்ணான மயிலம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.   இவர்களது தகாத உறவு இரு வீட்டாருக்குமே தெரிய வர இரு தரப்புமே அவர்களை கண்டித்துள்ளனர். இருப்பினும் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து, அவர்களை பிரிக்க உறவினர்கள் முடிவு செய்ததால், இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

Read More

மதுரையில் இபிஎஸ்-க்கு எதிராகவும், செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் தமிழக அரசியலில் புதிய புயல் கிளம்பியுள்ளது.   இபிஎஸ் புகைப்படத்தை புறக்கணித்துவிட்டு, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஹைலைட் என்னவென்றால் ‘அதிமுக பொதுச் செயலாளர் செங்கோட்டையன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது தான்.

Read More

மதுரை உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டி டாஸ்மாக் கடையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில் காவலர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டார்.   காவலரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கஞ்சா வியாபாரி பொன்வண்ணனை கைது செய்ய முற்படுபோது, போலீசாரை தாக்கி விட்டு ஓடியதாகவும் அதனால் கம்பம் வனப்பகுதியில் என்கவுண்ட்டர் செய்யப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Read More

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசனின் தந்தை இரா.சுப்புராம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.   இரா.சுப்புராம் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தியதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆளாக்கிய தந்தையை இழந்து வாடும் சு.வெங்கடேசன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாகவும் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read More

மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தையும், சிபிஎம் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான இரா.சுப்புராம் (79) காலமானார். உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.   மதுரை ஹார்விபட்டியில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சுப்புராம் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More

மதுரையில் விமான நிலையம் அருகே ஈச்சநேரியில் பாதி உடல் எரிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் தனிப்படை காலராக பணிபுரிந்த மலை அரசன் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.   கடந்த ஒன்றாம் தேதி மலையரசனின் மனைவி விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் அது தொடர்பான ஆவணங்களை மருத்துவமனையில் பெற வந்த மலையரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  

Read More

மதுரை அலங்காநல்லூரில் உள்ள ஏறுதழுவுதல் அரங்கில், மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காளைகளுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.   அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காளைகளுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதனை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.   இதனைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மேலூர் […]

Read More
1 2 3 81