
விருதுநகர் மாவட்டத்தில் செவிலியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் கைது செய்யப்பட்டார். சாத்தூரில் உள்ள கிருஷ்ணர் மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரகுவீர் என்பவர் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் செவிலியர் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மருத்துவரை கைது […]

வாலாஜாபேட்டையில் கடைக்கு நூடுல்ஸ் வாங்க வந்த ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடை உரிமையாளரான 75 வயது சாமியாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகம் போன் பெட்டிக்கடை நடத்தி வருபவர் சிவலிங்கம். 75 வயது சாமியார். ஆனால் இவர் தனது கடைக்கு முதலில் வாங்க வந்த ஒன்பது வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதால் கோபமடைந்த பெற்றோர் கடைக்கு […]

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயிலை சேர்ந்த சத்ய பிரகாஷ் என்பவர் குறும்படத்தில் பள்ளி மாணவி ஒருவரை நடிக்க வைப்பதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. நீதிபதி 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

புதுச்சேரியை சேர்ந்த் இளம்பெண் ஒருவருக்கு சென்னையை சேர்ந்த திலீப் குமார் என்பவருக்கும் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இருவரும் நெருங்கிப்பழகி வந்துள்ளனர். நெருக்கம் அதிகமாகவே இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்றவற்றில் தகவல்களை அவர்கள் இருவரும் பரிமாறிக் கொள்கின்றனர். ஒரு சில வாரங்கள் சென்ற பிறகு அந்தப்பெண் தன்னுடன் இணைய வழியே பழகிய சென்னையைச் சேர்ந்த திலீப் குமார் என்பவரிடம் இது நமக்கு சரிவராது நாம் காதலிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு நண்பர்களாக வேண்டுமென்றால் நம் […]

பெங்களூருவில் பெண் பயணி ஒருவர் ரேபிடோவில் சென்றபோது, பைக் ஓட்டுநர் சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது வாகனப் போக்குவரத்து பெரு நகரங்களில் அதிக அளவில் இருந்தாலும், போக்குவரத்து நெரிசலில் விரைவாக செல்வதற்காக பலரும் பைக் டாக்சிகளை விரும்புகின்றனர். இதற்கான கட்டணமும் குறைவு என்பதால் இந்த சேவை பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக வேலைக்குச் செல்பவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் பைக் டாக்சிகளுக்கு நல்ல வரவேற்பு […]

ஈரோட்டில் தனியார் பயிற்சி மையத்தில் மாணவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பயிற்சியாளர் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஈரோடு காந்திஜி சாலை அலுவலகம் எதிரே உள்ள கட்டிடத்தில் ஆடிட்டர் சத்யமூர்த்தி என்பவர் ஆடிட்டிங் பயிற்சி வகுப்பினை நடத்தி வருகிறார். இந்த பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவிகள் இருவரிடம் சத்தியமூர்த்தி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாணவியின் உறவினருக்கு தெரிய வர ஆத்திரமடைந்த அவர்கள் சத்திய மூர்த்தியை […]

இளம்பெண் ஒருவர் டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரர் தன்னை ஏமாற்றிவிட்டு கருக்கலைப்பு செய்யச் சொல்லி மிரட்டுவதாக காவல் நிலைய நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். சென்னை பெருங்குடியை சேர்ந்த மோனிஷா என்பவர் அதே பகுதியை சேர்ந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நன்றாக பழகி வந்த நிலையில் ராஜகோபாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது மோனிஷாவிற்கு தெரிய வந்தது. இதனால் அவரை விட்டு விலகி இருந்த […]

மல்யுத்த வீராங்கனைகள் எழுப்பிய பாலியல் புகார் தொடர்பான வழக்கில் பிரிட்ஜ் பூசனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பாஜக பிரிட்ஜ் போஷனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மல்யுத்த வீராங்கனைகள் எழுப்பிய பாலியல் புகார் தொடர்பான வழியில் பிரிஜ் பூசனுக்கு இடைக்கால ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டியூஷன் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாநகரத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியார் டியூஷன் சென்டர் நடத்திவரும் நபர் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.