
சபரிமலை சன்னிதானத்திற்குள் சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் போன்றவர்களின் போஸ்டர்களை எடுத்துச் செல்ல பக்தர்களை அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரு சில பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பேனர்களை கோவிலுக்குள் கொண்டு வந்து பிரார்த்தனை செய்து வந்தனர். இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழிபாடு செய்யும் உரிமை உள்ளது. ஆனால் கோவிலில் நடைமுறை பாரம்பரியத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. […]

சபரிமலை கோயில் வெடி வழிபாட்டுக்கான வெடி வழிபாட்டு மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் சபரிமலையில் அதிக அளவில் பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் அது பரபரப்பாக காட்சியளித்து வருகிறது. இந்த பகுதியில் வெடி வழிபாட்டு செய்யும் மையம் உள்ளது. இந்த மையம் அன்னதானம் மையத்திற்கு பின்புறம் உள்ளதால் பக்தர்கள் வருவது வழக்கம். 3 ஊழியர்கள் வெடி மருந்தை நிரப்பிக் கொண்டிருந்த பொழுது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் மூன்று […]

சபரிமலை பக்தர்களின் வசதிக்காக பம்பைக்கு நெரிசல் குறைவான நேரத்தில் மூன்று பேருந்துகளும் நெரிசல் அதிகமான நேரத்தில் குறைந்த பட்சம் 10 பேருந்துகளும் இயக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. சபரிமலையில் தரிசனம் முடிந்த பக்தர்களுக்காக பம்பையில் நெரிசல் இல்லாத நேரங்களில் குறைந்தது மூன்று பேருந்துகளும் நெரிசல் அதிகமான நேரங்களில் குறைந்தபட்சம் 10 பேருந்துகளும் இயக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீலக்கல்லில் வாகனம் இருக்கும் இடத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் […]

கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ வீரபத்திர சாமி கோவில் மகா குடம் முழக்கு விழாவை ஒட்டி தலையில் தேங்காய் உடைத்த பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் காத்தாடி குப்பம், மல்லி நாயகனப்பள்ளி உள்ளிட்ட எட்டு ஊர்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சேது சமுத்திர தீர்த்த ஆரத்தி பூஜை விமர்சியாக நடைபெற்றது. கார்த்திகை மாத பௌர்ணமியை ஒட்டி கொண்டாடப்பட்ட விழாவில் அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்பொழுது கடல் அன்னைக்கு சிறப்பு பூஜையும் ஆரத்தையும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மக்கள் சுவாமி தரிசனம் செய்து கொண்டனர்.

நெல்லை பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரத்தில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு கொண்டாடப்பட்ட காளியம்மன் கோவிலில் திருவிழாவில் மலமலவென எரிந்து கொண்டிருந்த சொக்கப்பனுக்குள்ளே முருகன் என்பவர் மதுபோதையில் விழுந்துள்ளார். படுகாயம் அடைந்த முருகனை பொதுமக்கள் மீது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அக்னி பிழம்பாக சிவன் காட்சி காட்சியளித்த தளம் திருவண்ணாமலை என கூறப்படுகிறது. தீபத் திருவிழாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3,500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு மகாதீபம் ஏற்றப்படுகிறது. 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். மகாதீபம் ஏற்றப்பட்டு அண்ணாமலையார் அரோகரா என பக்தர்கள் முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பகலிலும் இரவிலும் சாமி வீதி உலா நடைபெற்றது. ஏழாம் நாளில் மகா ரத தேரோட்டம் விமர்சையாக நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று பஞ்ச மூர்த்திகள் ஆன விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் தனித்தனி வாகனங்களில் உலா வந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. […]

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சன்னிதானத்தில் நிலக்கல் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குடிநீர், போக்குவரத்து, மருத்துவம், சுகாதார முதலீட்டு அடிப்படை வசதிகள் குறித்து விஷ்வராஜ் ஐஏஎஸ் ஆய்வு மேற்கொண்டார்.