--- --:--:-- --
LEO_3381

கொங்குச் சீமையின் இதயமாகத் திகழும் திருப்பூரில், அதிகாரத்தின் அநீதிகளையும், சமுதாயத்தின் அழுக்குகளையும் அஞ்சாமல் தோலுரித்துக் காட்டும் ‘குற்றம் குற்றமே’ வார இதழ், தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த  திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்
புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்

பிப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை அன்று, .வாசகர்களின் ஆசியோடு இதழின் புதிய அலுவலகத் திறப்பு விழா திருப்பூரில் அரங்கேறியது.

 

துணிச்சலின் புதிய முகவரி இதோ!

 

திருப்பூர் 15 வேலம்பாளையம் மேம்பாலம் அருகே, எண். 78, திருவள்ளூர் நகரில் அமைந்துள்ள குற்றம் குற்றமே வார இதழின் புதிய அலுவலகம், இனி தொடர்ந்து நீதிக்காகக் குரல் கொடுக்கும் சாமானியர்களின் புகலிடமாகத் திகழப்போகிறது. புலனாய்வு இதழியல் துறையில் பணத்திற்கும், அதிகாரத்திற்கும் அடிபணியாமல், “தவறு எங்கு நடந்தாலும் அது குற்றமே” என்ற ஒற்றை முழக்கத்தோடு செயல்படும் இந்த இதழின் ஆசிரியர் சஷ்டி கண்ணதாசன் தலைமையில் விழா கோலாகலமாக நடைபெற்றது.

 

அரசியல் துருவங்களை இணைத்த அறம்!

 

புதிய அலுவலக்ம் திறப்பு விழாவின் ஹைலைட்டே, இரு துருவங்களாக உள்ள ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உள்பட பல தரப்பினரும் இணைந்து, குற்றம் குற்றமே இதழின் நடுநிலையை பாராட்டி வாழ்த்தியதை குறிப்பிடலாம்.

 

புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் “மாநகராட்சிப் பிரச்சினைகளை வெறும் புகாராகப் பார்க்காமல், மக்கள் பிரதிநிதிகளான எங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகாண வைப்பதில் இந்த இதழ் தனித்துவமானது. குட்ட வேண்டிய இடத்தில் குட்டி, தட்ட வேண்டிய இடத்தில் தட்டிக் கொடுக்கும் இந்தச் சாட்டை, இன்னும் பல வெற்றிகளைக் காண வேண்டும்,” என மனதார வாழ்த்தினார்.

திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ், அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு தனது பாராட்டுகளைப் பதிவு செய்தார்.
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ், அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு தனது பாராட்டுகளைப் பதிவு செய்தார்.

எம்.எல்.ஏ. செல்வராஜ் (திமுக): திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ், “மக்களின் பிரச்சினைகளைச் சமுதாயக் கண்ணோட்டத்துடன் அணுகி, அவற்றுக்குத் தீர்வு காண்பதில் ‘குற்றம் குற்றமே’ ஒரு வழிகாட்டியாக இருக்கிறது,” என அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு தனது பாராட்டுகளைப் பதிவு செய்தார்.

 

திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ விஜயகுமார் நேரில் வந்து வாழ்த்துகையில், “வேண்டப்பட்டவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு இந்த இதழுக்குக் கிடையாது. தவறு எங்கு நடந்தாலும் அதைத் துணிச்சலாகத் தோலுரித்துக் காட்டுவதுதான் இவர்களின் வெற்றியின் ரகசியம். எவருக்கும் அஞ்சாத இந்தத் தொண்டு தொடரட்டும்,” எனப் புகழ்ந்து தள்ளினார்.

திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ விஜயகுமார் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தாா்.25-வது வாா்டு (அதிமுக) கவுன்சிலா் தங்கராஜூம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தாா்.
திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ விஜயகுமார் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தாா். 25-வது வாா்டு (அதிமுக) கவுன்சிலா் தங்கராஜூம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தாா்.

நிறைந்த கூட்டமும், நீடித்த நம்பிக்கையும்!

 

புதிய அலுவலகத்தை குற்றம் குற்றமே வார இதழின் உதவி ஆசிரியர் திலகா அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். துணை ஆசிரியரும், வழக்கறிஞருமான ராமச்சந்திரன் வரவேற்றார். மாநகராட்சி 25-வது வார்டு அதிமுக கவுன்சிலர் தங்கராஜ், விசிக மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி என மேலும் பல முக்கியப் புள்ளிகள் விழாவைச் சிறப்பித்தனர். பின்னலாடைத் தொழில் துறையினர் முதல் சமூக ஆர்வலர்கள் வரை திரளாகப் பங்கேற்றது, இந்த இதழ் மக்கள் மத்தியில் வைத்துள்ள செல்வாக்கைப் பறைசாற்றியது.

புதிய அலுவலகத்தை குற்றம் குற்றமே வார இதழின் உதவி ஆசிரியர் திலகா குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.
புதிய அலுவலகத்தை குற்றம் குற்றமே வார இதழின் உதவி ஆசிரியர் திலகா குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

குற்றம் குற்றமே வார இதழுக்குத் தூணாக விளங்கும் நிருபர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் ஏஜெண்டுகள் புடைசூழ நடைபெற்ற இவ்விழா, வெறும் அலுவலகத் திறப்பு விழாவாக மட்டுமன்றி, நேர்மையான இதழியலின் வெற்றிக் கொண்டாட்டமாக அமைந்தது.

 

“பயமில்லை… பட்சபாதம் இல்லை…” என்கிற தாரக மந்திரத்தோடு தனது புதிய அலுவலகத்தில் இருந்து பணியைத் தொடங்கும் ‘குற்றம் குற்றமே’ குழுவினருக்கு, கொங்கு மண்டலமே திரண்டு வந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

குற்றம் குற்றமே வார இதழின் புதிய அலுவலகம்

Leave a Reply

Right Menu Icon