
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை கட்டாயம் வகுப்புகள் நடத்த வேண்டும் கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தாமதமானதால் பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் நடத்தி முடிக்கும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. 01.05.2023க்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை நடத்தி முடித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி முத்து மாரியம்மன் நகரிலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்யவேண்டும் என்று சில நாட்களுக்கு முன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மாவட்ட உதவி கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன், பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து ஆகியோர் நேரில் சென்று விசாரணை […]

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு பள்ளி மாணவர்கள் இடையே நடந்த மோதலின் பொழுது சக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பிளஸ் டூ மாணவன் கல்லால் தாக்க முயற்சித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. புதுப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பிளஸ் டூ மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. […]

மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் மழை எதிரொலியாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை தொடர்ந்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு பள்ளி சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் தனது நண்பர்களுக்கு சிறுமியை இறையாக்கிய காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் உட்பட 3 பேரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சிறுமியின் காதலன் கார்த்திக் மற்றும் அவனது நண்பர்கள் ஆதி, ஹரிஸ் ஆகிய 3 பேரையும் போலீசார் போக்ஸோ […]

பொறியியல் படிப்புகளுக்கான JEE மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் இந்த தேர்வை சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர JEE நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி அடுத்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி முதல் கட்ட JEE மெயின் தேர்வு இன்று தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த […]

நாட்டில் முதன்முறையாக உயர்கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கி கேரள அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக கேரளா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேரளா கல்வி நிலையங்களில் மாணவிகளின் வருகைப் பதிவு 73 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால் கட்டாய சதவீதம் 75 ஐ பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. மாணவிகள் மாதவிடாய் காலங்களில் மாணவிகள் விடுமுறை எடுப்பதாக தெரிவித்துள்ள கேரள அரசு இதற்காக மாணவிகளுக்கு விடுமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. […]

புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா என்பது குறித்து அன்பில் மகேஷ் தகவல் வெளியிட்டுள்ளார். பொங்கல் பண்டிகை முடிந்து புதன்கிழமை ஜனவரி 18ஆம் தேதி அனுப்பு புதன்கிழமை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என பரவும் தகவலை மாணவர்கள் பெற்றோர்கள் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வண்ணக் கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொம்பு செடியை கட்டி மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வருகிற […]