
கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளின்படி தகுதியான ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு முறை கேட்டில் ஆசிரியர் பணிக்காக எட்டு ஆண்டுகள் காத்திருந்த நிலையில் பள்ளி நிர்வாக குழு மூலம் ஆசிரியர் நியமனம் நடைபெறுவது முரணானது எனக் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தற்காலிக ஆசிரியராக நியமிக்கப் போவதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது. ஆசிரியர் தகுதித் […]

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்ட அறிக்கையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வருவதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும் கொரோனா வழி முறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தமிழ்நாடு பொது மருத்துவ […]

11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. நடந்து முடிந்த பிளஸ் 1 தேர்வில் 8 லட்சத்து 83 ஆயிரத்து 882 பேர் பங்கேற்றனர். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 50 ஆயிரத்து 598 பேர் தேர்வு எழுதினர். தற்போது பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இணையதள முகவரிகளில் வெளியிடப்படும் […]

அசாமில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூலை 26ஆம் தேதியை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வெள்ளம் காரணமாக 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பனிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சியை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நான் முதல்வர் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி காலை 9 மணி அளவில் நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக உயர்கல்வித்துறை தொழில்நுட்ப கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன புகழ் பெற்றவர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு மாணவர்களுக்கு […]

தமிழ்நாட்டில் பிளஸ்1 தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்கள் மற்றும் அனைத்து அரசு நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு […]

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியானது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று காலை 11 […]

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாவதால் மாணவர்களின் கல்லூரி சேர்க்கைகளும் தாமதம் ஏற்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனவும் பொன்முடி குறிப்பிட்டுள்ளார். தேர்வு முடிவு தாமதம் ஆவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஜூலை 1ஆம் தேதி நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக விமான நிலையம் சென்றார். பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து இந்திய அணியுடன் பயணம் செய்யவில்லை. தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.