
குற்றம் குற்றமே செய்தி எதிரொலி – சாக்கடை அடைப்புகளுக்கு பிறந்தது வழி! துரிதமாக செயல்பட்ட துணை மேயர்…. துணிச்சலுடன் மற்ற பணிகளும் முடிப்பாரா?

வாகன விபத்து காப்பீடு பெற, விபத்துகளை செட்டப் செய்து வழக்கு போடுவதாக, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது. லஞ்ச வேட்டையில் திளைத்து, காவல்துறையினருக்கே களங்கம் ஏற்படுத்தி வரும் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் சில போலீசாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் துறைகளில் முக்கியமானதாக உள்ளது காவல்துறை. வேலியே பயிரை மேயும் கதையாக லஞ்சம், முறைகேடு, குற்றங்களைத் தடுக்க […]

எதிர்பார்த்தது போலவே, பலமணி நேர கிடுக்கிப்பிடி சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஐயோ நெஞ்சு வலிக்குதே என்று செந்தில் பாலாஜி கதற, அரசின் செல்வாக்கு மிக்க அமைச்சரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்ற காட்சி, தமிழக அரசியல் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனால் அதிர்ச்சியுள்ள முதல்வர் ஸ்டாலின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார். முதலில் ஐடி… இப்போது ஈ.டி… தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை என்று […]

கனிம வள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த புகாருக்கு ஆளான, திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் கே.எல்.கே வள்ளலை, பணியில் இருந்து விடுவித்து கலெக்டர் வினீத் துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டார். பதவியில் இருந்து விடைபெறும் முன்பு கலெக்டர் செய்த தரமான சம்பவத்தால் விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநராக இருந்து வந்தவர் கே.எல்.கே. வள்ளல். இவரது அலுவலகம், கலெக்டர் வளாகத்தில் 6-வது தளத்தில் உள்ளது. திருப்பூர் […]

கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணமும், அதற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரமும் இந்திய அளவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தை முன்கூட்டியே போலீசார் கண்டறித்தவறியதால், தமிழக அரசுக்கு பெரும் சங்கடம் உண்டாகி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள உள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகிறது. இதன் தாளாளராக இருப்பவர், […]

போதைப்பொருள் பயன்படுத்தும் ஆசாமிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை “குற்றம் குற்றமே” சுட்டிக்காட்டிய நிலையில், 15வேலம்பாளையம் போலீசார் வேகமாக செயல்பட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்தியதால், இது, பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையையும் பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இதனால், நகரை ஒட்டிய புறநகர்ப்பகுதிகளாக இருப்பதால், சமூக விரோதச் செயல்களும், சட்டம் ஒழுங்கு பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, காவல்துறையினரின் கண்காணிப்பை இன்னும் பலப்படுத்த […]

பசுமை இல்ல பயனாளிகளிடம், துறையூர் பி.டி.ஓ. மணிவேல் லஞ்சம் வாங்கியதை, முதன்முறையாக வீடியோவுடன் “குற்றம் குற்றமே” இணையதளம் செய்தி வெளியிட்டு அம்பலப்படுத்திய நிலையில், அவரை தமிழக அரசு தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக (பி.டி.ஓ) இருப்பவர் மணிவேல். இவரை, பச்சமலை அருகே உள்ள வண்ணாடு ஊராட்சியை சேர்ந்த பசுமை வீடு திட்ட பயனாளிகள் சிலர், மே 16ம் தேதி சந்தித்தனர். அப்போது பயனாளிகளுக்கு […]

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி தேர்வு மையத்தில், போதிய திட்டமிடல் இல்லாததால், மாணவ, மாணவியர் சிரமப்பட்டதை, “குற்றம் குற்றமே” இணையதளம் சுட்டிக்காட்டிய நிலையில், பள்ளி நிர்வாகம் உடனடியாக அதை சரி செய்திருப்பது, பலரின் பாராட்டை பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 91 தேர்வு மையங்களில், தமிழகத்தில் மிகப்பெரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியான திருப்பூர் ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளியும் ஒன்று. இந்த […]

மோகன் கார்த்திக் குறித்த “குற்றம் குற்றமே” இணையதளத்தில் செய்தி வெளியாகி திருப்பூரை பரபரப்பாக்கிய நிலையில், அல்லக்கைகள் சிலரின் அழுகுணி ஆட்டம், அவருக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக உள்ளது. நிருபர்களை சகட்டுமேனிக்கு விமர்சித்துவிட்டு, பின்னர் பயந்து போய் பதிவை நீக்கிவிட்ட கோழைகளுக்கு, பத்திரிகையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். நமது “குற்றம் குற்றமே” வார இதழ் மற்றும் இணையதளம், என்றைக்கும் நீதியின் பக்கம், நேர்மையின் பக்கமே நின்று வருகிறது. விருப்பு வெறுப்பின்றி, குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் செயல்பாடுகளை […]