
சீன விஞ்ஞானிகள் மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்த ‘காக்டெய்ல்’ நானோ தடுப்பூசியை எலிகள் மீது நடத்திய சோதனை வெற்றி என நான்ஜிங் அறிவியல் & தொழில்நுட்ப யுனிவர்சிட்டி தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தால் பல லட்சம் பேருக்கு பயனளிக்கும். உலக அளவில் ஒவ்வொரு 34 வினாடிகளுக்கும் ஒருவர் இருதய நோயால் இறப்பதாக US இருதய சங்க அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2025-2026ஆம் கல்வியாண்டின் மருத்துவ படிப்பு மாணவ சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 4ஆம் தேதி நடைபெறுகிறது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று இரவு 11.50 மணிக்கு நிறைவடைகிறது. […]

துறையூர் பிப். 24 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு எம் ஜி ஆர் மன்றம் சார்பில் என். சங்கர் அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் தலைமையில் ஏழை எளியவர்களுக்கு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வேட்டி சேலை பிரட் பிஸ்கட் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மண்டல செயலாளர் நாகராஜ் மாவட்ட துணை செயலாளர் வேம்பு ரெங்கராஜ் மாவட்ட மருத்துவரணி செயலாளர் அரவிந்த் […]

சென்னை அயனாவரத்தில் தனியார் மருத்துவமனையில் 4 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த அந்த சிறுவனுக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பதாக மருத்து வர்கள் தெரிவித்ததாகவும் அதற்கான சிகிச்சையை முறையாக வழங்காததை சிறுவன் இறக்க காரணம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். சிறுவனின் சடலத்துடன் சாலையின் அமர்ந்து சென்றவர்களை போலீசார் தடுத்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருப்பூரில் இருந்து ஈரோடு சென்ற தனியார் பேருந்து பல்ல கவுண்டம்பாளையம் அருகே விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த பயணிகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காத ரத்தம் தேவைபடுகிறது என்ற வாட்ச் அப்புகளில் தகவல் பரவியது. இதனையறிந்த மனிதநேய மக்கள் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட இளைஞரணி பொருப்பாளர் சாஜித் அஹமது அவர்கள் தலைமையில் தமுமுகவின் மருத்துவ சேவை குழு தற்போது முதல் கட்டமாக 32 யூனிட் இரத்தமும், 2 வது கட்டமாக […]

மும்பையில் 6 மாதக் குழந்தைக்கு HMPV தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், இந்த வாரம் HMPV தொற்று உறுதியான குழந்தைகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. HMPV வைரஸ் ஏற்கெனவே இந்தியாவில் உள்ளதுதான் என்கின்றனர். டாக்டர்கள். உதாரணத்துக்கு, புனேவில் ஜூலை 2022 முதல் மார்ச் 2023 வரை வைரல் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட வயதுக்கு உட்பட்ட 114 குழந்தைகளில், 13% பேருக்கு HMPV தொற்று இருந்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் தனது 97 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய அத்வானிக்கு, கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவுக்கு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே, டெல்லி அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஒரிரூ நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று இரவு திடீரென அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் […]

திண்டுக்கல் சிற்பி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். தரை மற்றும் முதல் தளத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்த்தில் திருச்சி ரோட்டில் அமைந்துள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தனியார் மருத்துவமனையில் இருந்து குறைந்தது […]

மெக்சிகோவில் காலாவதியான குளுக்கோஸ் பாட்டில்களை பயன்படுத்தியதால் 13 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக குறிப்பிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் குளுக்கோஸ் பாக்கெட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என்று நாடு முழுவதும் இருக்கும் மருத்துவமனைகளுக்கு மெக்சிகோ சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.