சென்னையில் மீண்டும் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் கைவரிசை காட்ட தொடங்கியுள்ளனர். கார் கண்ணாடிகளை உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நித்யா வெங்கட்ராமன் சென்னைக்கு அவரது கணவருடன் வந்துள்ளார். அடையார் காந்திநகர் பகுதியில் உள்ள சலூனுக்கு அவர் சென்றுள்ளார். அப்பொழுது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளிருந்த லேப்டாப் மற்றும் பேக் ஆகியவை திருடப்பட்டுள்ளன. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்பொழுது இரண்டு […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே முகத்தில் துணியை சுற்றியபடி வந்த இரண்டு பேர் ஏடிஎம் இந்திரத்தை கட்டிங் மிஷினை பயன்படுத்தி அறுத்து பணம் கொள்ளை அடிக்க முயற்சித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. நீண்ட நேரம் முயற்சி செய்தும் ஏடிஎம் மிஷினை அறுக்க முடியாததால் கொள்ளையர் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் 4 லட்சத்து 44,000 பணம் தப்பியது.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இரண்டு பேரிடம் தலா 7 லட்சம் பணம் வாங்கிய ஏமாற்றியதாக சத்துணவு ஊழியர் அமைப்பாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி வரதராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர். வெள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜன் வினோத் மற்றும் முத்து ஆகியோரிடம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. வேலையும் வாங்கி தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் தலைமறைவாக வரதராஜன் சார் கோட்டையில் […]
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் அவரை கடுமையாக தாக்கி விட்டு 200 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளனர். பெட்ரோல் பங்க் மற்றும் நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது மனைவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தனது இரண்டாவது மகள் அக்க்ஷயாவுடன் மோகன்தாஸ் வீட்டிலிருந்துள்ளார். அப்பொழுது இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு முகமூடி கொள்ளையர்கள் மோகன் தாஸ் தலையில் இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த […]
கரூரில் திருமணம் செய்து கொள்வதாக பல ஆண்களை ஏமாற்றிய இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் எழவனூர் பகுதியை சேர்ந்த பைனான்சியரை இளம்பெண் கடந்த 2020 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு தனது தாயை சந்திக்க செல்வதாக கூறிய கிருத்திகா வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளார். இதனால் பைனான்சியர் சின்ன தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கிருத்திகா பணம் பறிக்கும் வகையில் […]
கோவை மாவட்டத்தில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் நாடகமாடி ஒருவரை திசை திருப்பிய 10 சவரன் நகையை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவுக்குள் இருந்த 23 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். வீட்டில் இருந்தவர்கள் விவசாயி பணிகளை பார்க்க தோட்டத்திற்கு சென்றிருந்த வேளையில் கொள்ளை நடந்திருக்கலாம் என்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பெயரை சொல்லி, ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக பல கோடி ருபாய் ஏப்பம் விட்டதாக காங்கிரஸ் ஊராட்சி மன்ற தலைவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அமைந்துள்ளது, கொல்லஞ்சி ஊராட்சி. இதன் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சலோமி என்பவர் பொறுப்பு வகிக்கிறார். இவரும் இவரது கணவர் சோபிதாசும் சேர்ந்து மெகா மோசடி வேலையை அரங்கேற்றியதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுற்றுவட்டாரப் […]
திருவள்ளூரில் இரண்டு ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன். மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத் தலைவரான இவர் சுற்று வட்டார பகுதியில் ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இரவில் புகுந்து நகை பணம் திருடியுள்ளார். மேலும் அவற்றை விற்பனை செய்து ஒரு கோடி ரூபாய் அளவில் கிராமத்தில் சொகுசு வீடு கட்டியுள்ளார். இந்த நிலையில் இரண்டு […]