தமது அரசியல் வாழ்வில் மோடியைப் போல எந்த பிரதமரும், சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் பிரசாரம் செய்ததை பார்த்ததில்லை என மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். புனேவில் பேசிய அவர், தனக்கு 53 ஆண்டுகால அரசியல் அனுபவம் உண்டு என்றும், இத்தனை ஆண்டுகளில் மோடி, அமித்ஷா போல சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்த பிரதமர், உள்துறை அமைச்சரை கண்டதில்லை என்று சாடினார்.
மகாராஷ்டிராவில் ஆம்புலன்ஸ் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் கர்ப்பிணி உயிர் தப்பினார். ஜர்தான் பகுதியில் கர்ப்பிணியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது வாகனத்தில் இருந்து புகை வருவதை கண்டு ஓட்டுனர் அனைவரையும் இறங்க சொன்னார். சில நிமிடங்களில் தீப்பற்றி எரிய தொடங்கிய நிலையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர், காவலர்கள் என 90 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் அண்மையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. திசநாயக வெற்றி பெற்று புதிய அதிபர் ஆனார். இதையடுத்து இலங்கையின் 17ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. […]
நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 75,000 மருத்துவ இடங்கள் கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிகாரின் தர்பாங்காவில் நடந்த நிகழ்ச்சியில் 12 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, இந்தி உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் மருத்துவப் படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார். பிகாரின் முசாபர்பூரில் புற்றுநோய் மருத்துவமனை திறக்கப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்தை விட்டு […]
மகாராஷ்டிராவில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலாததால் மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கூறியுள்ளார். இன்று மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேச திட்டமிடப்பட்டிருந்த மக்களவை எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி இதற்காக தனி விமானம் மூலம் மும்பை வரவிருந்தார். ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால் பயணம் ரத்தானதால் அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வீடியோ வெளியிட்டுள்ள ராகுல் காந்தி நான் உங்கள் அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் […]
தூத்துக்குடியில் நள்ளிரவு எதிர் வீட்டு பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி மணப்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் சுரேஷ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரை போதையில் அரை நிர்வாணமாக எதிர் வீட்டுக்குள் சுரேஷ் நுழைந்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் வாங்கிய ஹோட்டலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சிம்லாவில் உள்ள சிஐடி காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்களுக்காக வரவழைக்கப்பட்டிருந்த சமோசா காணாமல் போனது பற்றி சிஐடி போலீசார் சிறப்பு விசாரணை நடத்தி அண்மையில் உயர் அதிகாரிகளிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையில் சிம்லாவில் உள்ள ரேடிசன் ஹோட்டலில் இருந்த போலீசார் மூன்று பெட்டிகளில் சமோசாக்களை வாங்கி […]
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 1) இளைஞர்களுக்கு 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 2) மகளிர் உதவித்தொகை ரூ.1,500 இலிருந்து 2,100-ஆக உயர்த்தப்படும். 3) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும். 4) மின் கட்டணம் பல மடங்கு குறைக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தை ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி கொள்ளையடித்து வருவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். அம்மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மாநிலத்தை ஆண்டவர்கள் ஊழல் செய்வதையே கொள்கையாக வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டினார். இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைப்பவர்களின் திட்டங்களை பாஜக முறியடிக்கும் எனவும் உறுதியளித்தார்.