பி.டி.ஆரின் 10 நிமிட ஆடியோ மட்டுமே வெளியிட்டேன் : அண்ணாமலை
மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் பி.டி.ஆரின் 30 நிமிட ஆடியோவில் 10 நிமிடங்கள் மட்டுமே வெளியிட்டுள்ளேன் மீதமுள்ள 20 நிமிட ஆடியோ என்னிடம் உள்ளது. அதை வெளியிட்டால் அரசியல் பிரச்னை ஏற்படும் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமைலை பிரச்சாரத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர், த.வெ.க என 4 முணை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கான பிரச்சாரத்தில் இங்கியுள்ளனர்.
இதில் மதுரை மத்திய தொகுதி தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார் தொகுதிகளின் பட்டியலில் இணைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக உள்ள பி.டி.ஆரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் இயக்குனரும் நடிகருமன சுந்தர்.சி. களமிறங்கியுள்ளார். இதன் காரணமாக மதுரை மத்திய தொகுதி தமிழக அளவில் பெரும் கவனம் ஈர்த்துள்ள நிலையில், சுந்தர்.சி.க்கு ஆதரவாக அவரது மனைவி குஷ்பு உள்ளிட்ட பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, மதுரை மத்திய தொகுதியில் சுந்தர்.சி.க்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பி.டி.ஆர் பேசிய 10 நிமிட ஆடியோ தான் வெளியிட்டேன். மீதமுள்ள 20 நிமிட ஆடியோவை வெளியிட்டால் அரசியல் பிரச்னை ஏற்படும் என்று கூறியுள்ளார். பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை, தி.மு.க. வேட்பாளர் பி.டி.ஆர்.தியாகராஜன், மிராசுதாரர், ஜாமீன்தார், முதலாளி போல் உள்ளார். இவரது கைத்தடி, அடியாள் தான் பொன்வசந்த். மதுரை மேயரின் கணவர். சொத்து வரி முறைகேடு காரணமாக மேயர் ராஜினாமா செய்வதவர்.
சொத்து வரியை உயர்த்தாமல் இருக்க பணம் வாங்கி மோசடி செய்த பொன்வசந்த் பெரிய முதலாளிகளுக்கு இல்லாமல் சாமானியர்களுக்கு சொத்து வரியை உயர்த்தியுள்ளனர். ஏற்றவில்லை. இதற்காக பொன் வசந்த் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தார். அ.தி.மு.க. சார்பில் புதிய நீதி கட்சி வேட்பாளர் சுந்தர்.சி, வெளியூரில் இருந்து வந்தவர் என்று பி.டி.ஆர் சொல்கிறார். வெளியூரில் இருந்து வந்தவர் தான் ஒரு மதுரைக்காரர் என்று சொன்னால் பெருமைபட வேண்டும். நீங்கள் அமெரிக்காவில் இருக்கும் போது அமெரிக்காகாரர் என்று சொன்னீர்கள், இப்போது மதுரை வந்தால் மதுரைக்காரர் என்பதா? மதுரை மக்களுக்கு சேவையாற்ற வந்தால் வெளியூர்காரரா? என்று கேள்வி எழுப்பிய அண்ணாமைலை, 10 ஆண்டுகளாக மதுரைக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால், நான் யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா? என் குடும்பம் யார் தெரியுமா? என்று கேட்கிறார்கள்.
மதுரைக்கு செய்ய நினைத்தை என்னால் செய்ய முடியவில்லை. அதற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது என்று பி.டி.ஆர் கூறியுள்ளார். அப்போது எதற்கு எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும்? தி.மு.க.வில் ஏன் இருக்க வேண்டும்? பிடிஆர் நிதி அமைச்சராக நன்றாக தான் இருந்தார். இவர் பேசிய ஆடியோவை லீக் செய்து நானும் ஒரு சின்ன தவறு செய்துவிட்டேன். அந்த ஆடியோவில் 30 நிமிடம் பேசுகிறார். நான் வெளியிட்டது 10 நிமிடம் மட்டும் தான். இன்னும் 20 நிமிடம் இருக்கிறது. அதை வெளியிட்டால் பெரிய அரசியல் பிரச்சினை வந்துவிடும்.
அந்த ஆடியோவில், தி.மு.க.வில் பையனும், மருமகனும் ரூ.30 ஆயிரம் சம்பாதித்துவிட்டார் என நண்பரிடம் பேசுகிறார். அதன் பிறகு தான் நிதி அமைச்சர் பதிவியில் இருந்து தூக்கப்பட்டார். அமெரிக்காவில் பணிபுரிந்த கம்பெனிகளை திவாலாக்கிவிட்டு மதுரையை திவாலாக்க வந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.





