
சென்னை மேடவாக்கத்தில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை பொதுவெளியில் வைத்து கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்த 16 வயது மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டவர் காதலித்ததாக கூறப்படுகிறது. புதன்கிழமை காலை கல்லூரிக்கு செல்வதற்காக மேடவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவியை தர தர என அருகில் உள்ள குறுகலான சந்துக்கு வசந்த் இழுத்துச் சென்றார். அங்கு […]

சென்னையில் நடந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை 23 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 2000 ஆம் ஆண்டு பூந்தமல்லி அருகே நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய டேவிட் விபு என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்பு தப்பி ஓடினார். நீதிமன்ற உத்தரவின் பேரில் டேவிட் காவல்துறையினர் பல ஆண்டுகளாக தேடி வந்தனர். அவர் கேரளாவில் இருப்பதை அறிந்து விசாரித்த பொழுது டேவிட் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். ஆனால் அவர் பெயர் […]

சென்னையில் ஆட்டோ டிரைவரின் வங்கி கணக்கில் 9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.15 மட்டுமே இருந்த ஆட்டோ ஓட்டுநரின் வங்கி கணக்கிற்கு அதிக பணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். டெபாசிட் செய்த பணத்தை திரும்ப பெற்ற தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தவறுதலாக டெபாசிட் செய்ததாக வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 9,000 கோடியில் ₹21,000 பணம் போக எஞ்சிய தொகையை திரும்ப பெற்றதாக டிஎம்பி வங்கி விளக்கம் அளித்துள்ளது.

சென்னை தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பாஜக எஸ்சி அணிமண்டல தலைவர் பீரி வெங்கடேசன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னைக்கு சுற்றுலா வந்த மெரினாவில் கடலில் குதித்த உதகை இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். உதகையில் இருந்து 12 இளைஞர்கள் சுற்றுலாவுக்கு வந்துள்ளனர். அப்பொழுது கடலில் குளிக்க சென்ற பொழுது மூன்று பேர் அலையில் சிக்கியுள்ளனர். இதில் இருவரை மீட்பு குழுவினர் மீட்டனர். இதில் ஒருவர் மாயமாகியுள்ளார்.

சென்னை, கோவையில் 30 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை அரபி கல்லூரியில் தீவிரவாதி செயல்களுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அரபிக் கல்லூரியில் படித்தவர்களின் வீடுகளில் எம்எல்ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை திரு.வி.க நகர், நீலாங்கரையிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில் பெட்ரோல் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டிலுடன் சேர்த்து இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போனுக்கு அழைப்பு வந்த போது திடீரென தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில் இளம்பெண் படுகாயம் அடைந்தார். உடல் பருமனாக இருந்ததால் தீப்பிடித்ததும் வண்டியில் இருந்து உடனே இறங்க முடியவில்லை என அவர் வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 95% தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரவு நேரத்தில் பசு மாடு ஒன்று சாலையில் சென்றவர்களை விரட்டி விரட்டி தாக்கியது. அந்த பசு மாடு திடீரென ஆக்ரோஷமாகி போவோர் வருவோரை எல்லாம் விரட்டியது. சாலையில் சென்ற வாகனங்களையும் விட்டு வைக்காத அந்த மாட்டினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தவறி விழுந்த இளைஞரை அந்த மாடு புரட்டி புரட்டி எடுத்தது. பசு தாக்கியதில் காவலர் உட்பட 6 பேர் காயமடைந்தனர். பல மணிநேர போராட்டத்திற்கு பின் மாடு கட்டுக்குள் […]

சென்னை தண்டையார்பேட்டையில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையம் முன் தென் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டை ரெட்டை குடியிருப்பை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் சிறுமி மட்டும் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.