
திருச்சியில் அரசு பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தார். சாத்திரம் பேருந்து நிலையத்தை இருந்து 7 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து போது ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே பேருந்தை நிறுத்த முயற்சித்தும் அது முடியாமல் சாலையின் ஒருபுறத்தில் இருந்த கடைகளில் மோதி நின்றது. ஓட்டுனரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் இறந்துவிட்டதாகவும் பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருதரப்பு ஆட்டோ சங்கத்தினர் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சவாரி எடுப்பது தொடர்பாக இருதரப்பு ஆட்டோ சங்கத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆகியுள்ளது. அப்பொழுது ஒரு தரப்பு ஆட்டோ சங்கத்தின் பெயர் பலகையை மற்றொரு தரப்பினர் அப்புறப்படுத்தினார். அப்பொழுது இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இதனை தொடர்ந்து போலீசார் இரு தரப்பையும் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி பேருந்து நிலைய சிக்னலில் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் காயமடைந்த நிலையில் திடீரென பிரேக் போட்டதால் பேருந்தில் இருந்த பெண் ஒருவர் நிலை தடுமாறி படியின் வழியே வெளியே விழுந்தார். சிக்னலில் பேருந்து திரும்பிய பொழுது எதிர்பாராமல் இரு சக்கர வாகனம் பேருந்து முன் வர பேருந்து ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்த நிலையில் விபத்து ஏற்பட்டது.

திருச்சியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு குழாய் பதிவுகளுக்காக தோண்டப்பட்ட குழியில் இருசக்கர வாகனத்துடன் ஒருவர் தவறி விழுந்தார். திருச்சி தெம்மூர் அருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்தது தெரியாமல் தவறி விழுந்தவரையும் இருசக்கர வாகனத்தையும் அக்கம் பக்கத்தினர் மீட்டனர். பள்ளத்தை பாதுகாப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழன் கீழ் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் கிடைத்தால் இந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பன உள்ளிட்ட காரணங்களை வலியுறுத்தி கிராமத்தை சேர்ந்த மக்கள் […]

திருச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவர் நூதன முறையில் கடத்த முயன்று சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் சிக்கியது. கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்பொழுது பயணி ஒருவர் கொண்டு வந்த இரண்டு சாக்லேட் ஜாம் டப்பாவில் தங்கத் துண்டுகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன்படி 149 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்டவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி சிங்காரத் தோப்பு பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் 100-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து விழாவில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில், 100-வது ஆண்டு விளையாட்டு போட்டிக்கு தகுதியான, சரியான நபரை தான் சிறப்பு […]

திருச்சியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக் கோரி செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க சொல்லி பயன்பாட்டில் இல்லாத செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் கொடுத்தார். தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி அருகே சிறுவனின் தொண்டையில் சிக்கிய ஊக்கை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை இன்றி அகற்றினர். குண்டூர் பர்மா காலனி சேர்ந்த கோபிநாத் என்பவரின் மகன் இரண்டு வயது சிறுவன் ஊக்கினை விழுங்கியதால் வலியால் துடித்தான். இதனையடுத்து சிறுவன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தொண்டையில் விரிந்த நிலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அறுவை சிகிச்சை இன்றி ஊக்கு அகற்றப்பட்டதால் சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.