
தூத்துக்குடியில் ₹2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்ததாக முன்னாள் எம்.பியும், பாஜக மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது நிலத்தை அபகரித்துவிட்டு கொலை மிரட்டல் விடுவதாக தாமஸ் கிங்ஸ்டன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் உறுதியானால், சிறை உறுதி என சொல்லப்படுகிறது.

ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ளா வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு, அதிமுக வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பணி, தேர்தல் பரப்புரை திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

கல்விக்கடன் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கல்விக்கடனை ரத்து செய்வதோடு,மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பான புதிய திட்டத்தை வகுக்க வேண்டும் என ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது, மனுதாரர் தனது மனுவை திரும்பப் பெறுவதாக கூறியதை அடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பரவல் சற்று தணிந்துவரும் நிலையில், இடியை இறக்கும் அதிர்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான நிம்பஸ், அமெரிக்கா, ஆசிய நாடுகளில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கண்ணாடித் துண்டு (அ) பிளேடுகளை விழுங்கினால் ஏற்படும் வலியை போன்ற மோசமான தொண்டைப் புண்கள் உருவாவதே இதன் அறிகுறி.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடல்நல பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து இன்று மதியம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற அவர், ஒரு வாரம் அங்கு தங்கி சிகிச்சை பெறுவார் என தெரியவந்துள்ளது. அண்மையில் கோவையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்ட அவர் தற்போது சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்ற விவரம் தெரியவில்லை.

ஏர் இந்தியா விபத்து குறித்து, விமான விபத்து புலனாய்வு குழு முறையான விசாரணையை தொடங்கியுள்ளது. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து விதிகளின் படியே, விசாரணைக்கு அமெரிக்கா மற்றும் போயிங் குழுக்கள் உதவி வருகின்றன. கருப்புப் பெட்டி பதிவுகளை அமெரிக்காவில் டிகோட் செய்வது குறித்த முடிவை இந்திய விசாரணை குழுதான் எடுத்தது’ என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஆரணி டவுன் பகுதியில் சக மாணவனை மற்றொரு மாணவன் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கழுத்தில் காயமடைந்த மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் அரசு உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். […]

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 25ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை, பொதுவாக […]

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தைப் பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் […]