
தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஓசூர் அருகே நேற்று இரவு காரில் கடத்தப்பட்ட ரோகித் என்ற 8-ம் வகுப்பு மாணவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சக நண்பர்கள் இருவரை பிடித்து விசாரித்ததில் சிறுவன் கொல்லப்பட்டதும், அடர்ந்த வனப்பகுதியில் உடல் வீசப்பட்டதும் தெரியவந்துள்ளது. காரில் கடத்திச் சென்று கொலை செய்த 2 பேர் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீசாரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அஜித்தின் வாய், பிறப்புறுப்பு மற்றும் காதுகளில் மிளகாய் பொடி போடப்பட்டுள்ளதாக ஐகோர்ட் மதுரை அமர்வு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர கொலை வழக்கில் சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது. எனவே, உணர்வுப்பூர்வமான மற்றும் நியாயமான முறையில் அஜித் மரண வழக்கை சிபிசிஐடி சிறப்பு குழு விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரதட்சணை தராததால் சொந்த மருமகளை, மாமனார் பாலியல் படுகொலை செய்த சம்பவம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது. கடந்த ஏப்.14 அன்று இரவு மருமகளை கொல்ல மொத்த குடும்பமும் சதித் திட்டம் தீட்டியது. இதற்காக தூக்க மாத்திரை கலந்து கொடுத்த மாமனார், மருமகள் என்றும் பாராமல் பாலியல் படுகொலை செய்துள்ளார். பின்னர் உடலை தெருவுக்கு வெளியே தோண்டி வைத்த 10 அடி ஆழ பள்ளத்தில் புதைத்துவிட்டு வந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகே ஆடு, கோழி திருடர்களை கிராம மக்கள் அடித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்புவிற்கு அழகமா நகரி கிராமத்தில் தோப்பு உள்ளது. இங்கு ஆடு மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு அந்த தோப்புக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆடு, கோழிகளை திருடியதாகத் தெரிகிறது. அப்போது கோழிகள் கத்தும் சத்தம் கேட்டு அங்கு திரண்ட மக்கள் ஆடு மற்றும் சாக்கு பைகளில் கோழிகளுடன் இருந்த […]

பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த இளம்பெண், தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். பெற்றோர் பணிக்கு சென்றிருந்த வேளையில் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், அவரை ஒருதலையாக காதலித்து வந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மாணவியை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு […]

ராணிப்பேட்டை அருகே புலிவலத்தை சேர்ந்த ஜெகத்குமார் மகள் ஜனனி 10-ம் வகுப்பு படித்துள்ளார். நேற்று திடீரென இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் பலியானார். சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர், கொலையாளியான திருவள்ளூரை சேர்ந்த சுப்பிரமணியை (21) தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கைது செய்து விசாரித்ததில், காதலிக்காததால் கொன்றதாக கூறியுள்ளார்.

ஓமலூர் அடுத்த சின்னேரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (68), கணவரை இழந்தவர். இவருக்கு ராஜா (45) மற்றும் முருகானந்தம் (43) என இரண்டு மகன்கள் உள்ளனர். முருகானந்தம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வசித்து வரும் நிலையில், ராஜாவுடன் சரஸ்வதி சேலத்தில் வசித்து வந்தார்.கடந்த மே 20 ஆம் தேதி, மாடு மேய்க்கச் சென்ற சரஸ்வதி, இரவு 7 மணி ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றனர். அப்போது, சரஸ்வதிக்குச் சொந்தமான தோட்டத்தில், தலையில் […]

நாகர்கோவில் அருகே துணியை சரியாக தைக்காததால் டெய்லர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெய்லரான செல்வத்திடம் சந்திரமணி என்பவர் பேண்ட் ஒன்றை தைக்க கொடுத்துள்ளார். ஆனால் அதை செல்வம் சரியாக தைக்கவில்லை என சந்திரமணி வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் கத்தரிக்கோலால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். சந்திரமணியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு அருகே நகைக்காக முதிய தம்பதிகளை கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரிப்பு. அடுத்தடுத்து நடக்கும் கொலைகளுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படாததால் மக்கள் அச்சம். தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.