மதுரை விமான நிலைய விழா புறக்கணிப்பு..!
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது தென் தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கை. இந்த கனவு நனவாகும் விதமாக, சமீபத்தில் மத்திய அமைச்சரவை மதுரை விமான நிலையத்திற்கு ‘சர்வதேச அந்தஸ்து’ வழங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று மதுரையில் இதற்கான அதிகாரப்பூர்வ விழா மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் இந்த விழாவிற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைச் சுட்டிக்காட்டி எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் (X) தளத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “வெறுப்பு அரசியல் எந்த வடிவிலும் நிறுத்தப்பட வேண்டும்.
ஒற்றுமை, சுயமரியாதை மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை காக்க நாம் செய்யும் தியாகங்கள் எப்போதும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் வெறும் யார் எம்.எல்.ஏ., யார் அமைச்சர் என்பதைக் தீர்மானிப்பதற்காக மட்டுமல்ல. வெறுப்பையும் பிளவையும் நம்பும் அரசியல் சக்திகள் ஆட்சிப் பதவிகளில் அமர அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலாகும்.
எங்கள் காங்கிரஸ் தலைவர் கார்கே அவர்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் எனக்கு வழங்கப்பட்ட இந்த பொறுப்பிற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நம்பிக்கையின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்களுக்கும், அகில இந்திய பொதுச் செயலாளர் கேசி. அவர்களுக்கும், ஏஐசிசி பொறுப்பாளர் எனது சகோதரர் கிரிஷ் சோடங்கர் அவர்களுக்கும் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. நாம் இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலை ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பை நான் பணிவுடன் ஏற்கிறேன்.
மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்று 28 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அனுப்புவது எங்கள் தெளிவான இலக்காகும்.
ஒன்றிணைந்து, தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் அனைவர் இணைந்த அரசியலை வலுப்படுத்துவோம்” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.





