--- --:--:-- --

மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மோடி வருகை..!

6

துரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.

 

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பிரதமர் மோடி சென்று சாமி தரிசனம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு கோவில் வாசல் முதல் கருவறை வரை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

கருவறைக்கு முன்புள்ள மகாமண்டப படிக்கட்டுகளை சீரமைத்து பிரதமர் எளிதாக தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை கோவிலில் தரிசனம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon