நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அரசியல் அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான் என, நடிகர் பார்த்திபன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், பிரியாணி சுவையில் தனி முத்திரை பதித்து வரும் ‘சென்னை பிரியாணி’ ஓட்டல் துவக்க விழா நடைபெற்றது. சென்னையை தலைமையிடமாக கொண்ட இக்குழுமத்தின் கோவை முதல் கிளையை, நடிகர் பார்த்திபன், நடிகை நிக்கி கல்ராணி மற்றும் பிரபல சமையல் கலை நிபுணர் தாமு ஆகியோர், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். […]
கோவையில், மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல் தேர்தல் நடந்ததால், வாக்கு எண்ணிக்கையின் போது எனக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்று, ஆட்சியரே பேசும் பிரத்யேக வீடியோ, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கோவையிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிகாரிகளாக பணியாற்ற உள்ள, 1340 அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் பயிற்சி பெற்றவர்களை சந்தித்து, கோவை மாவட்ட […]
சீனாவில், ஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற இளம் பெண்ணின் கன்னத்தை ஆக்டோபஸ் ஒட்டிக்கொண்டு கடிக்கும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனர்கள் எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமானவர்கள். பாம்பு, பல்லி, பூரான், கரப்பான்பூச்சிகளை சர்வ சாதாரணமாக சாப்பிட்டு, நமக்கு குமட்டலையோ, அருவெறுப்பையோ வரவைப்பார்கள். அப்படித்தான், சீனாவை சேர்ந்த உணவு இணையதளத்தை நடத்தி வரும் பெண்ணின் விளையாட்டான செயல், விபரீதத்தில் போய் முடிந்தது. அவர், தனது உணவு செய்முறை குறித்த நேரலையின் போது, ஆக்டோபசை உயிருடன் சாப்பிட […]
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பாடிய தமிழ் ராப் பாடலின் வீடியோ, வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கும், தமிழக மண்ணுக்கும் எப்போதுமே ஒரு நெருக்கமான பந்தம் உள்ளது. அதிலும் குறிப்பாக, தமிழக ரசிகர்கள் சென்னை அணியில் கேப்டன் தோனியை ‘தல’ என்று அழைத்து ஆர்ப்பரிக்கிறார்கள். ஹர்பஜன் சிங்கை எடுத்து கொண்டால், முக்கால்வாசி தமிழராகவே மாறிவிட்டார். பந்து சுழற்றவும் தெரியும், கம்பு சுத்தவும் […]