ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை பெறுவதற்கு இன்றே கடைசி என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். பொங்கலை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை அடங்கிய பரிசுத் தொகுப்பை அரசு வழங்கியது. அதனைப் பெற 18ம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட்டிப்பு செய்து இன்று மாலை வரை வழங்கப்படவுள்ளது.
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்ததாக கூறி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யோஷித ராஜபக்ச இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் யோஷித 3 முறை ஆஜராகி விளக்கமளித்திருக்கிறார்.
பல்லடம் மங்கலம் சாலை தண்டாயுதபாணி கோவில் முன்பாக, சாலையில் உள்ள இரும்பு தடுப்பு உடைந்த நிலையில் காணப்படுவதால், அவ்வழியே செல்லும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீர் செய்து தர வேண்டும் என பல்லடம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அண்ணாதுரை, கையில் பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் இன்று ஓட்டுநர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பூ கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் போக்குவரத்து கழக அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.
நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தி கொல்ல முயன்றவன் வங்கதேசத்தைச் சேர்ந்தவன் என உறுதிப்படுத்திய போலீசார் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகரான கொள்ளையர் ஒருவர் வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் பாலிவுட்டை அதிர செய்திருந்தது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தனது பெயரை மாற்றி மாற்றி கூறி குழப்பத்தை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கைதான கொள்ளையன் வங்கதேசத்தை […]
நடிகர் விஷால் குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் சங்க தலைவர் நாசர் அளித்த புகாரின்பேரில் யூடியூபர் சேகுவேரா மற்றும் 2 யூடியூப் சேனல்கள் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதகஜராஜா பட விழாவில் பங்கேற்றபோது விஷாலின் கைகள் நடுங்கியது குறித்து அவதூறு பரப்பியதாக 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளியில் 15 வயது சிறுவன் துப்பாக்கி சூடு நடத்தியதில் 16 வயது மாணவி கொல்லப்பட்டதும் மேலும் ஒரு மாணவர் படுகாயம் அடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்திய சாலமன் என்ற அந்த மாணவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆண்டு மற்றும் அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் 330 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்து காய வைத்து பொடியாக்கி கால்வாயில் கரைத்ததாக முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். குடும்பத்துடன் வசித்து வந்த குருமூர்த்தி என்பவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து கொலை செய்திருக்கிறார். சடலத்தை மறைக்க முயன்ற குருமூர்த்தி youtube வீடியோக்கள் மற்றும் ஹாலிவுட் படங்களை பார்ப்பதில் அதில் ஒருவர் நாயின் சடலத்தை துண்டாக்கி குக்கரில் வேகவைத்து அதனை காய வைத்து […]
விஜய்யின் ‘பைரவா’ மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை அபர்ணா வினோத், திருமணமான 2 ஆண்டுகளில் விவகாரத்து அறிவித்துள்ளார். தீவிர ஆலோசனைக்குப் பின்னர் ரனில் ராஜ் உடனான மண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக இஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 2023இல் காதல் திருமணம் செய்த அபர்ணா, ‘நடுவன்’ படம் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர்.