
‘திருச்சி திருவரங்கம் தொகுதி மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளரே’ எனக் குறிப்பிட்டு விஜய் பிறந்தநாளுக்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் அவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, நின்றால் ஜெயிக்க வைப்போம் என்று அம்மாவட்ட தவெகவினர் கூறுகின்றனர். ஏற்கெனவே மதுரை, விழுப்புரம், திருச்சி ஆகிய இடங்களில் விஜய் களமிறங்குகிறார் என தகவல்கள் பரவின.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மனப்பாக்கத்தில் 3.15 கி.மீ. நீள மேம்பாலம் கட்டும் பணிக்காக வைக்கப்பட்ட இரண்டு ‘ஐ’ வடிவ கான்கிரீட் கர்டர்கள் (தண்டவாள டிராக் சரிந்து விழுந்து) வியாழக்கிழமை (ஜூன் 12, 2025) இரவு விழுந்து நொறுங்கின. இந்த விபத்தில், கீழே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். நள்ளிரவு வரை, காவல்துறை மற்றும் சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் கர்டர்களை அகற்றும் பணியிலும், அடையாளம் தெரியாத நபரின் […]

கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை வரையிலும், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

சென்னை, வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், வணிக வளாக கட்டடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நகரின் முக்கிய பகுதியான வடபழனியில் ரூ. 800 கோடி மதிப்பீட்டில், 6.65 ஏக்கர் பரப்பளவில் பேருந்து முனையம், வணிக வளாக கட்டடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் சில முக்கிய […]

திருச்சி அருகே பொன்மலை மாவடிகுளத்தில் ரயில்வே பணிக்காக மண் அள்ளுவதாகக் கூறி சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக காவிரி நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கம், பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் டிப்பர் லாரிகள், ஜே.சி.பி. இயந்திரங்களைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பொன்மலை மஞ்சள்திடல், கம்பிகேட் உள்ளிட்ட பகுதியில் புதிய ரயில்வே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு மண் தேவைப்படுவதால் பொதுப்பணித் துறையினரிடம் மாவடிகுளத்தில் 2.5 ஏக்கர் […]

சென்னையில் பலத்த சூறைக்காற்று இடி மின்னல் மழை காரணமாக, சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூரு மற்றும் திருச்சிக்கு இரண்டு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. கோவையில் இருந்து 157 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சூறைக்காற்று மழை காரணமாக, சென்னையில் தரையிறங்க முடியாமல், திருச்சி விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதைப்போல் கொல்கத்தாவில் இருந்து 174 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் […]

சென்னை அருகே தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் 13 வயது மாணவி அண்மையில் சேர்ந்தார். அவரை தூக்கிச் சென்று, சிட்லபாக்கத்தை சேர்ந்த காவலாளி மேத்யூ (49) பலாத்காரம் செய்தார். சிறுமி கத்தியபோது கம்பியால் தாக்கி 2 கால்களை உடைத்தார். சிறுமியின் சத்தம்கேட்டு மற்றவர்கள் வர, மேத்யூ ஓடிவிட்டார். எனினும் விசாரணை நடத்தி, மேத்யூவை போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீஸ் கைது செய்தது.

சென்னையில் தரையிறங்க வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது, லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லேசர் ஒளி இடையூறால் தரை இறங்க வந்த விமானம், சிறிது நேரம் வானில் தத்தளித்தது, பிறகு பத்திரமாக விமானம் தரையிறங்கியது 2 வாரங்களில் 3வது முறையாக விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய வழக்கில், நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் வரம்பிற்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, 7-க்கும் மேற்பட்ட மனுக்கள் மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், ‘கடந்த […]