
தமிழக கிரிக்கெட் வீரர் ஜெகதீசன் தொடர்ந்து 5 போட்டிகளில் சதம் அடித்து முதல் தர போட்டிகளில் சாதனை படைத்திருக்கிறார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக தமிழக வீர ஜெகதீசன் உலக சாதனை படைத்துள்ளார். விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக ஐந்தாவது சதத்தை அடித்தார் தமிழக வீரர் ஜெகதீசன்.

ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார். கிரிக்கெட் சூதாட்ட அறிக்கை தொடர்பாக சம்பத்குமாருக்கு எதிராக தோனி 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

விராட் கோலியின் ஹோட்டல் அறை வீடியோவை வெளியிட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னணி கிரிக்கெட் வீரரான விராட் கோலி டி 20 உலகக்கோப்பை தொடரில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் விராட் கோலி தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்த ரசிகர்கள் சிலர் அதனை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர். அதன் காரணமாக ஆவேசமடைந்த அவர் விராட் கோலி பிரைவசிக்கு மதிப்பு அளியுங்கள் எனக்கூறி தனது ஆதங்கத்தை […]

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னையில் 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் பள்ளிகளை சேர்ந்த ஏழு அணிகள் பங்கேற்க உள்ளனர். முதல் போட்டியில் போரூர் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளி வெற்றி பெற்றது. ஐந்து நாட்கள் நடைபெறும் தொடரில் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுழற் கோப்பை வழங்கப்படவுள்ளது.

திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான போட்டிகளில் தடகள போட்டிகளை பூண்டி ஏ.வி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், குழு போட்டிகளை காந்தி நகர் ஏ.வி.பி மெட்ரிக் பள்ளிகளிலும் ஏ.வி.பி கல்வி குழுமங்கள் முன்னின்று நடத்தியது. திருப்பூர் வடக்கு குறு மைய அளவிலான போட்டியில் குழு போட்டி மற்றும் தடகள போட்டிகள் இரண்டிலும் ஜெய்வாபாய் மாதிரி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் குழுவினர் குழு போட்டிகளில் 165 புள்ளிகளும், தடகளப் போட்டிகளில் 155 புள்ளிகள் எடுத்து […]

திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டி செட்) சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 27 வது நிட்சிட்டி கைப்பந்து போட்டிகள் திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் உள்ள டீ செட் விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்கள் நடந்தது. போட்டியில் மாணவர்களுக்கு சீனியா மற்றும் சூப்பர் சீனியர்., மாணவிகளுக்கு சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் திருப்பூர் சுற்று பகுதியை சேர்ந்த 23 பள்ளிகளை சேர்ந்த 50 அணிகள் கலந்து கொண்டன. […]

சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அயர்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு 81.08 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார். சர்வதேச தடகள போட்டி ஈட்டி எறிதலில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற படத்தை நீரஜ் சோப்ரா பெகிறார்.

தோனி உடனான பார்ட்னர்ஷிப் பற்றி என்றென்றும் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தோனியின் தன்னம்பிக்கையை பெற்ற தளபதியாக இருந்த தனது கிரிக்கெட் அனுபவத்தில் தான் மிகவும் உற்சாகமாக இருந்த காலகட்டம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தோனி உடனான பார்ட்னர்ஷிப் என்றென்றும் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்றும் டுவிட்டரில் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.