
கலாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி மாறன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல கோடி ரூபாய் சன் டிவி நிறுவன பங்குகளை மோசடி செய்ததாக கூறி, கலாநிதி மாறனுக்கு தயாநிதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஸ்டாலினின் நெருங்கிய உறவினர்கள் இடையேயான இந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் ஞாயிறு மாலை இருவரையும் அழைத்துப் பேசி சமரசம் செய்துள்ளார்.

திருவண்ணாமலையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறையைக் கண்டித்து வருகிற ஜூலை 16 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜூலை 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணாமலை நகராட்சி அண்ணா சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சமீபத்தில் தனது சுற்றுப்பயணத்தின் போது பேசிய இபிஎஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தேய்கின்றன. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற அளவுக்கு முகவரி இல்லாமல் இருப்பதாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை என்றும், MGR-க்கு அரசியலில் நிரந்தர முகவரி பெற்று தந்ததே சிபிஐ தான் எனவும் அவர் கூறினார்.

முதல்வர் ஸ்டாலினின், தனிச் செயலாளராக உள்ள சண்முகம் IAS-ன் தாயார் ராஜலட்சுமி உடல் நலக்குறைவால் காலமானார். பின்னர், ஹாஸ்பிடலுக்கு நேரில் சென்ற ஸ்டாலின், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், பெற்ற அன்னையின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு எனவும் அவரை இழந்து வாடும் சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து கொள்வதாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

தவெக கட்சி சார்பில் MY TVK என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே இக்கட்சி செல்போன் செயலியை கொண்டு சேர்க்கையை நடத்தி வருகிறது. புதிய செயலியை விஜய் விரைவில் அறிமுகம் செய்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் தொண்டர்களுக்கு அவரே எடுத்து சொல்வாராம். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையடுத்து விஜய் தனது அரசியல் நகர்வுகளை வேகப்படுத்தி வருகிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று திண்டிவனத்தில் கூடியது. இதில், அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி உட்பட கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தச் செயற்குழுக் கூட்டத்தில், தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளிட்டவை அக்கட்சி நிறுவனர் ராமதாஸுக்கு வழங்கப்பட்டது. இவற்றோடு சேர்ந்து பாமக செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாமகவின் செயற்குழு கூட்டத்தில் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியும் […]

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றும் பகுதிக்கு தமிழிசை அனுமதிக்கப்பட்ட நிலையில், செல்வப்பெருந்தகைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து பேசிய செல்வப்பெருந்தகை, என்னை தடுத்து நிறுத்தியது ஏன் என அதிகாரிகளைத் தான் கேட்க வேண்டும் என்றார். மேலும் 2000 ஆண்டுகளாக இந்த பிரச்னை உள்ளது, அதனை ஒரே இரவில் தீர்க்க முடியாது எனவும் கூறினார்.

கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நீதிபதி, தனது அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று தாக்கல் செய்கிறார். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனிடையே காவலர்கள் தாக்கியதில், அஜித்குமார் உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில், விசாரணையை […]

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு வந்த அ.தி.மு.க ஒன்றிய நிர்வாகி உள்ளிட்டோரிடமிருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று கோவையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரசார சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். இதன் ஒரு பகுதியாக, ஒரு தனியார் அரங்கில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் சூளை உற்பத்தியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்திற்கு வந்து வெளியே காத்திருந்த தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கராஜ் என்பவர், […]