
சென்னை தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பாஜக எஸ்சி அணிமண்டல தலைவர் பீரி வெங்கடேசன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். நிலகொண்டா மாவட்டத்தில் உள்ள ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் அஜ்மீடா என்பவர் வீட்டுமனை விற்பனை தொடர்பான பத்திரப்பதிவுக்காக மதிய உணவுக்காக அருகில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது காரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கார் கண்ணாடிகளை உடைத்து ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை […]

விருதுநகர் மாவட்டத்தில் செவிலியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் கைது செய்யப்பட்டார். சாத்தூரில் உள்ள கிருஷ்ணர் மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரகுவீர் என்பவர் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் செவிலியர் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மருத்துவரை கைது […]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தனது நடத்தை குறித்து கேள்வி எழுப்பிய மாமியார் மருமகளை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செஞ்சி அடுத்த பாண்டிய குளம் கிராமத்தில் வசித்து வந்தவர் சின்ன பாப்பா. 65 வயதான மூதாட்டி ஆன இவர் தலையில் பலத்த காயத்துடன் வீட்டில் சடலமாக கிடந்தது அக்கம் பக்கத்தை பதற செய்தது. இது குறித்து மூதாட்டியின் மாற்றுத்திறனாளி மகன் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் […]

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஓசியில் மது பாட்டில் தர மறுத்த டாஸ்மாக் விற்பனையாளரை பீர் பாட்டிலால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். கூத்தாம்பட்டியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் முருகேசன் என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். மாலையில் இந்த கடைக்கு வானம்பாடியை சேர்ந்த அருள் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது பாட்டில்களை இலவசமாக தருமாறு முருகேஷ்வரிடம் கேட்டு வேறுபாட்டினால் தாக்கியதாக கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். படுகொலை தொடர்பாக ஏற்கனவே ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எஞ்சியுள்ள குற்றவாளிகளையும் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

வாலாஜாபேட்டையில் கடைக்கு நூடுல்ஸ் வாங்க வந்த ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடை உரிமையாளரான 75 வயது சாமியாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகம் போன் பெட்டிக்கடை நடத்தி வருபவர் சிவலிங்கம். 75 வயது சாமியார். ஆனால் இவர் தனது கடைக்கு முதலில் வாங்க வந்த ஒன்பது வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதால் கோபமடைந்த பெற்றோர் கடைக்கு […]

சென்னை ஓட்டேரியில் மொட்டை மாடியில் துணி காயப்போட சென்ற சிறிது நேரத்திற்குள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 6 சவரன் நகை மற்றும் பணத்தை திருட சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட கலையரசி என்ற பெண் அளித்த புகாரின் பேரில் புரசைவாக்கத்தை சேர்ந்த சுலைமான் வியாசர்பாடியை சேர்ந்த சரண் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் நேற்று முன்தினம் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சின்னமனூர் அருகே சாமி குளம் பகுதியை சேர்ந்தவர் காசில்கான். இவர் அலாவுதீன் என்பவரது மனைவியுடன் தொடர்ந்து பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அலாவுதீனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் அலாவுதீன் தனது மனைவியின் தந்தை முகமது சமீர் என்பவர் உடன் சேர்ந்து காசில் கானை கண்டித்துள்ளார். எனினும் இருவரும் தொடர்ந்து பேசியதால் ஆத்திரமடைந்த […]