
பலுசிஸ்தானில் நடந்த ரயில் கடத்தலுக்கும், இந்தியாவுக்கும் தொடர்பிருக்கலாம் என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பயங்கரவாதத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பதை உலகம் அறியும் என்று இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். பிறர் மீது பழி சொல்லும் முன், பாகிஸ்தான் தன்னை முதலில் உற்று நோக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

உலக தண்ணீர் தினமான வரும் 22ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிட்டுள்ளது. உலக தண்ணீர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்ட நிகழ்வுகளை மொபைல் செயலி வாயிலாக உள்ளீடு செய்யவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த புதிய வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் இந்தியாவிற்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அதிக அளவில் இந்திய எஃகு பயன்படுத்தப்படும் நிலையில், டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியாவின் எஃகு ஏற்றுமதியை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க வர்த்தகர்கள் வேறு நாட்டு எஃகு பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச […]

மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சைபர் மோசடி கும்பல்களிடம் பிடிபட்டிருந்த 500 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். கடந்த திங்களன்று 283 பேரும், நேற்று 266 பேரும் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். அதிக சம்பளத்தில் வேலை என்ற பொய் வாக்குறுதிகளை கூறி இந்தியர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

சீன விஞ்ஞானிகள் மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்த ‘காக்டெய்ல்’ நானோ தடுப்பூசியை எலிகள் மீது நடத்திய சோதனை வெற்றி என நான்ஜிங் அறிவியல் & தொழில்நுட்ப யுனிவர்சிட்டி தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தால் பல லட்சம் பேருக்கு பயனளிக்கும். உலக அளவில் ஒவ்வொரு 34 வினாடிகளுக்கும் ஒருவர் இருதய நோயால் இறப்பதாக US இருதய சங்க அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

மொரீசியஸ் நாட்டின் 57-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடைய 2 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, தீவு நாடான மொரீசியசுக்கு நேற்று சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர், பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் புகழ்ந்து பேசினார். அவர் பேசும்போது, மொரீசியஸை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் நாட்டில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக இந்திய அரசுக்கு பாராட்டுகளை […]

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் கடத்தியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கடத்தல் சம்பவம் எப்படி நடந்தது? என்பது பற்றிய வீடியோவை தீவிரவாத குழுக்கள் வெளியிட்டிருக்கின்றன. இந்த கடத்தல் சம்பவத்தில் 182 பயணிகள் சிறை பிடிக்கப்பட்டிருக்கின்றனர். சிலர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பலூச் விடுதலை படை எனும் தீவிரவாதிகள்தான் செய்திருக்கிறார்கள். ரயில் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை சுற்றி தீவிரவாதிகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மலைக்கு மேலேயும் தீவிரவாதிகள் குவிக்கப்பட்டிருக்கின்றனர். பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக […]

உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாக, சுவிஸ் நாட்டு காற்று தரம் குறித்த தொழில்நுட்ப நிறுவன ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதேபோல் உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடில்லி முதலிடம் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.க்யூ.ஏர் சார்பில் உலக காற்று தர அறிக்கை 2024 வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, உலகின் 17 சதவீதம் நகரங்கள் மட்டுமே, உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த தரமான காற்றினை கொண்டதாக உள்ளன. […]

பாகிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் கடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தான் விடுதலைப் படை அமைப்பினர் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற ரயிலை கடத்தியுள்ளனர். மேலும் விடுமுறைக்கு ஊருக்குச் சென்ற ராணுவ வீரர்கள் துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டதாகவும் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.