திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், தீபத்திருவிழா அன்று பக்தர்களை மலைமீது அனுமதிப்பது குறித்து, வல்லுநர் குழு இன்று ஆய்வு நடத்த உள்ளது. ஃபெஞ்சல் புயல் எதிரொளியாக பெய்த கனமழையால், 2.,668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மகாதீப மலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். வரும் 13ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெற உள்ள நிலையில், மலையின் ஈரப்பதம் காரணமாக மகாதீபம் ஏற்றும் நாளில் பக்தர்களை மலை ஏற அனுமதிக்க வேண்டாம் என வனத்துறை தெரிவித்தது.இதனை […]
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை முதல் மின்சார ரயில் சேவை குறைக்கப்படுவதாக வெளியான தகவல் தவறு – ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி வார நாட்களில் ரயில்கள் இயக்கம் என வெளியான தகவலுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட புதிய ரயில் அட்டவணை ஞாயிற்றுக்கிழமைக்கு மட்டுமே பொருந்தும்; திங்கள் முதல் சனிக்கிழமை வரை வழக்கமான அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே விளக்கம்
ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்திருப்பதாகவும், அது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தவெக தலைவர் விஜய் திருமாவளவனுக்கு கூட்டணி அழுத்தம் தரப்பட்டுள்ளதாக கூறியிருந்தது சர்ச்சையானது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது என்று பேசியதும் தமிழக அரசியலில் பேசுபொருளானது. […]
திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு டிசம்பர் 08 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையர் காரத்திகை தீபத் திருவிழா கடந்த டிசம்பர் 04 ஆம் தங்க மர கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இதையடுத்து முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபம் டிசம்பர் 13 ஆம் தேதி காலை 4 மணிக்கு அண்ணாமலையர் கோவிலின் முன் பரணி தீபமும் அதை தொடர்ந்து […]
சூர்யா நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட கங்குவா படம் நவ.14இல் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், தமிழில் முன்னெடுக்கப்பட்ட நல்ல முயற்சியாக இது கூறப்படுகிறது. இப்படம், அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியிடப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் உதயகுமார் மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. கோவிலில் அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான ஆணையை திமுக எம்.பி கனிமொழி அவரிடம் நேரில் வழங்கினார். கடந்த 18ம் தேதி யானை தெய்வானை பாகன், அவரது உறவினரை தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உதயகுமார் மீது மிகுந்த அன்பாக இருந்த யானை, ஒரு வாரத்திற்கு மேல் உணவு உட்கொள்ளாமல் இருந்தது.
திருவண்ணாமலையில் வரும் 13ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உள்ள நிலையில், கொப்பரை வைக்கும் இடத்தில் இருந்து 400 அடிக்கு மண் சரிவும், அரைமலை பகுதியில் இருந்து சுமார் 600 அடிக்கு கீழ் மற்றொரு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், மக்கள் யாரும் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில், மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
வாய்ச்சவடால் விட்டு பேசியவர்கள் யாரும் இன்று வரை எதுவும் செய்து காட்டியதில்லை என்று விஜய்க்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். திமுக மீது காலம் காலமாக விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கிறது எனக் கூறிய அவர், நானும் இறுமாப்போடு சொல்கிறேன், கட்டுப்பாடோடு பணியாற்றினால், 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் நிச்சயம் வெற்றிபெறும் என சூளுரைத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கரூர் சாலையில் உள்ள, காடு ஆஞ்சநேயர் கோவிலில், கார்த்திகை மாத சனிக்கிழமை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூஜையில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு விதமான, திரவியங்களைக் கொண்டு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.