
கோவை மாவட்டத்தின் 183 வது ஆட்சியாளராக கிராந்தி குமார் பாடி பொறுப்பேற்றுக் கொண்டார். திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த 2012 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான கிராந்தி குமார் பாடி கோவை மாவட்ட ஆட்சியராக அண்மையில் நிறுவனம் செய்யப்பட்டார். அதன்படி பொறுப்பேற்றுக் கொண்ட இவருக்கு முன்னாள் ஆட்சியர் மலர் கொத்துக்கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பேசிய ஆட்சியர் கிராந்திக்குமார் மக்களின் குறைகளை கேட்கவும், அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களை சென்றடைய நடவடிக்கை எடுப்பதாக […]

கோவையில் மதநல்லிணக்கத்தை பெறும் வகையில் பழனி பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமிய மக்கள் உணவு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

கோவையில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிகளிடம் ஏடிஎம் அட்டைகள் மற்றும் பணத்தை திருடியதாக இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர். சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியான கலைச்செல்வி தாயாருடன் தனியார் மருத்துவமனைக்கு பேருந்தில் சென்றுள்ளார். பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்ற கலைச்செல்வி தனது பையில் பர்ஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மீண்டும் பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தம் வந்த பொழுது அவர்களை கண்டதும் இரண்டு பெண்கள் தப்பி ஓட முயன்றனர். […]

கோவை மாவட்டம் வால்பாறையில் தெருவில் உலா வந்த சிறுத்தை ஒன்று வாயில் நாயை கவியபடி வரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் இது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறையினர் இந்த பகுதிக்கு வந்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 4 பேரை கோட்டைமேடு அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோவை உக்கடத்தில் உள்ள கோடீஸ்வரர் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் மாதம் கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமீஷா என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். 11 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் 5 பேருடன் விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் மேலும் 6 […]

கோவை மாவட்டம் சூலூரில் ஏடிஎம்மில் 500 ரூபாய் எடுத்தவருக்கு ஐந்து மடங்காக 2500 ரூபாய் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சூலூரில் வசித்து வருபவர் முருகபாபு. தலைமை காவலரான இவர் சூலூர் காவல் நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் 500 ரூபாய் எடுத்துள்ளார். ஆனால் ஏடிஎம் இல் இருந்து 500 ரூபாய்க்கு பதிலாக 2500 ரூபாய் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகபாபு தனக்குரிய 500 ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு மீதி […]

கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நடந்த சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. கோவையைச் சேர்ந்த ஷேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய இருவரை கைது செய்திருப்பதாக தேசிய புலனாய்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உரையாற்றினார். அப்பொழுது மக்களவை சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் நிகழும் என ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

கோவை கார் வெடிப்பில் மேலும் மூன்று பேரை கைது செய்தது என்.ஐ.ஏ. ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமது தவ்பிக், உமர் பருக், ஃபாரோஸ்கான் ஆகிய மூன்று பேரை கைது செய்தது என்.ஐ.ஏ.