--- --:--:-- --
Smart Liyagath

திருப்பூரில் ஊர்க்காவல் படையின் பெயரைப் பயன்படுத்தி, பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முகமது யாகத் அலிகான் என்பவனின் கேவலமான லீலைகளை, ‘குற்றம் குற்றமே’ வார இதழ் இனியும் மிகத் தீவிரமாக அம்பலப்படுத்தும் என்பதில் இம்மி அளவும் ஐயமில்லை!

 

செய்தியை வெளியிட்டு ஒரு மாதம் கழித்து, அந்த நபர் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்தலாம் என்று கனவு காண்கிறார். ஆனால், அவனது அந்தக் கனவு ஒருபோதும் நனவாகாது! அலிகானின் அனைத்து லீலைகளையும், அடாவடித்தனங்களையும் ஆணிவேர் வரை தோண்டி வெளிச்சத்திற்குக் கொண்டு வர, ‘குற்றம் குற்றமே’ இதழ் சிறிதும் தயங்காது!

 

ஊர்க்காவல் படை உதவியாளர் என்ற போர்வையில், இளம் தம்பதியினரை மிரட்டிப் பணம் பறிப்பது, பெண்களின் மொபைல் எண்களைப் பெற்றுக்கொண்டு அத்துமீறிய மெசேஜ்களை அனுப்புவது, கணவரைப் பிரிந்த பெண்கள், பனியன் கம்பெனி பெண்களை அச்சுறுத்துவது என முகமது யாகத் அலிகானின் அராஜகங்கள் எல்லை மீறிப் போயுள்ளன.

 

 

https://www.kuttramkuttrame.com/2025/11/24/a-thief-in-a-khaki-shirt-he-lures-women-into-a-daily-life-a-police-assistant-harasses-him-in-tiruppur/

இந்த சைக்கோத்தனத்திற்கு யார் மணி கட்டுவது? என்று பலரும் குமுறிக்கொண்டிருந்த நிலையில் தான், ‘குற்றம் குற்றமே’ கயவர்களின் மறுபக்கத்தைத் வெளியிட்டு தோலுரித்தது . தனது குட்டு அம்பலமாகிவிட்டதே என்று பதறிப்போன யாகத் அலி, என்ன செய்வது என்று தெரியாமல் ‘ரூம் போட்டு யோசித்திருக்கிறான்’ போல! அந்தப் பயத்தின் விளைவாகத்தான், இப்போது இந்த வெற்று வழக்கறிஞர் நோட்டீஸ் நாடகம்!

 

குற்றம் புரிவது யார்? அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம் என யாருடைய மிரட்டல்களுக்கும் அஞ்சாத பத்திரிகை நமது ‘குற்றம் குற்றமே’. எங்களுடைய அடிப்படைக் கொள்கைமே, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாமை என்பதுதான்.

 

அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம் உள்ளிட்ட பலரின் மிரட்டல்களையே பார்த்துவிட்ட குற்றம் குற்றமே இதழுக்கு, பெண்கள் பணத்தில் ஓசி டீ வாங்கி குடித்து , உல்லாசத்திற்கு ஊர் சுற்றித் திரியும் இவனை போன்ற அல்லக்கையின் அச்சுறுத்தல் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடங்கிப்போனது கிடையாது.

 

இனிவரும் நாட்களில் முகமது யாகத் அலிகானின் அக்கிரமங்கள் மேலும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு, அவை பட்டியலிடப்படும். எனவே, அச்சுறுத்தும் வேலைகளை உடனடியாக நிறுத்திக்கொண்டு, ஆக்கபூர்வமாக யோசிப்பதே  புத்திசாலித்தனம்!

 

வாசகர்கள், நேர்மையான அரசியல்வாதிகள், தலைசிறந்த காவல் துறையினர், வியர்வை சிந்திப் பாடுபடும் தொழில் முனைவோரின் வலுவான ஆதரவு எங்கள் பக்கம் இருக்கும்போது, ‘குற்றம் குற்றமே’ இதழ் குற்றவாளிகளுக்கு ஒருபோதும் தலைவணங்காது! தொடர்ந்து நீதியின் பக்கமே என்றும் பயணிக்கும்!

Leave a Reply

Right Menu Icon