--- --:--:-- --

உடல் சூட்டை தணிக்க செய்ய வேண்டியவை!

14

உடல் சூட்டை குறைக்க ஒவ்வொருநாளும் இளநீர் குடிக்க வேண்டும். கார மசாலா உணவுகளைத் தவிர்த்தல் மிகவும் நல்லது. பொரித்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவேண்டும். வெந்தயத்தை ஊற வைத்து தினமும் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம்.

 

ஒரு டீஸ்பூன் வெண்ணெயை தினமும் பாலில் கலந்து அருந்தலாம். மோர் சூட்டை நன்கு தணிக்கும்.92 சதவீதம் நீரும் வைட்டமின் சி சத்தும் கொண்ட தர்பூசணி பழம் உடல் சூட்டை நன்கு தணிக்கும். புதினா சாறு மோருடன் கலந்து பருகுவது உடனே சூடு தணியும்.

 

குளிர்ந்த பாலில் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் அருந்த சூடு தணியும். துளசி விதைகளை நீரில் ஊறச் செய்து குடிப்பது உடல் சூட்டை தணிக்கும் தினம் ஒரு நெல்லி சாற்றினை அருந்தலாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon