60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடியும் போட்டுக் கொண்டார்
தமிழகம் உள்பட நாடு முழுவது இன்று முதல், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. இதற்காக கோவின் என்ற செயலில் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
கடந்த ஓராண்டாக அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இந்தியா சார்பில் இரண்டு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களான சுகாதாரத்துறையினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டம் தொடங்கப்படுகிறது. அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். அவ்வகையில், தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
கொரோனா தடுப்பூசி திட்டத்திற்காக மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, ‘பான் கார்டு’ உள்ளிட்டவைகள் கொண்டு, ‘கோவின்’ என்ற செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்; அல்லது, தடுப்பூசி போடும் இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவு செய்து கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




