முக கவசங்களில் கொரோனா 7 நாட்கள் உயிர் வாழுமா?
கொரொனா வைரஸ் முக கவசங்களில் 7 நாட்கள் வரையும் ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் தலங்களில் சில நாட்கள் வரை உயிர்வாழும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக பிரபல மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் பிறகு சோப் உபயோகித்து கொண்டு விடலாம் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அச்சடிக்கும் காகிதம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் வைரஸ் மூன்று மணி நேரத்திற்கும், மரப்பலகை மற்றும் துணிகளை இரண்டு நாட்களுக்கும் அது உயிரோடு இருக்க வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே முக கவசம் மனிதர்கள் அதன் வெளிப்புறத்தை தொடாமல் இருப்பது மிகவும் முக்கியம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.






