முகம் பளபளக்க வேண்டுமா…! இத ட்ரை பண்ணுங்க!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நுங்குவின் சதைப்பகுதியை 2 டேபிள்ஸ் பூன்மற்றும் பால் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தேய்த்துக் கொள்ளுங்கள் வியர்குரு காணாமல் போய்விடும். ஓட்ஸ் 5 டேபிள்ஸ்பூன் எடுத்து வேகவைத்து கொள்ளவும்.இத்துடன் நுங்கின் சதைப்பகுதியை செய்து முகத்தில் போட்டுக் கொள்ளவும் கோடை காலத்தில் சருமம் பட்டுப் போன்று பளபளப்பாக இருக்கும்.

 

தேங்காய் தண்ணீர் நுங்கின் சதைப்பகுதி கற்றாழையின் சதைப் பகுதியை மூன்றும் சமஅளவில் எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து முகம் கழுத்து கை போன்ற இடங்களில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் மாசு மருவற்ற சருமத்தைப் பெறலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி 3 டேபிள்ஸ்பூன் நுங்கின் சதைப்பகுதியை எடுத்து ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

 

மாதம் இருமுறை செய்துவர முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் அழகு பெறும். நுங்குவின் உட்பகுதியில் இருக்கும் தண்ணீரை பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்க கருமை நிறம் நீங்கி முகம் பொலிவோடு இருக்கும்.


Leave a Reply