தேர்தல் பொதுக்கூட்டங்களில் கொரொனா பரவும் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


தேர்தல் பொதுக்கூட்டங்களில் கொரொனா பரவும் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது தேர்தல் ஆணையம். இது தொடர்பாக தனி கண்காணிப்பு குழுவை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களைகட்ட தொடங்கியிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரை மேற்கொள்ள தொடங்கிவிட்டன. தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் போன்றவற்றில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் கொரொனா பரவ வாய்ப்புள்ளது.

 

மேலும் அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள் தனிமனித இடைவெளி, முகக் கவசம் போன்றவை கேள்விக்குறியாகும் பட்சத்தில் அது நோய்த்தொற்று ஏற்பட காரணமாகி விடும் என்பதால் அதனை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

 

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Leave a Reply