திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 கட்டங்களாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை

திருப்பதி கோவிலில், மூன்று கட்டங்களாக பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்படும் என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக, கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி, திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

 

திருப்பதி கோவிலில், சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. மூன்று கட்டங்களாக பிளாஸ்டிக்கை முழுவதும் தடை செய்வதற்கு, நடவடிக்கை எடுக்கும் வகையில் இதற்கான திட்டம் இருக்கும்.

 

முதல்கட்டமாக, தேவஸ்தான அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டீலுகளுக்கு தடை செய்யப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்தப்படும். இதேபோன்று 15 நாட்களில் தேவஸ்தானம் சார்பில் வாடகைக்கு விட கூடிய அனைத்து பக்தர்களும் ஓய்வு அறைகளிலும் ஜல பிரசாதம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

 

மேலும், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதில் காகித டம்ளர், சொம்பு போன்றவை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.


Leave a Reply