தமிழகத்தில் 13 வகை தொழிற்சாலைகள் இயங்கலாம் என்ற உத்தரவு திடீரென ரத்து! தமிழக அரசு அறிவிப்பு !!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


தமிழகத்தில் ஜவுளி, இரும்பு, சிமெண்ட், டயர், காகிதம் உள்ளிட்ட 13 வகையான உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்ட உத்தரவை சில மணி நேரங்களிலேயே தமிழக அரசு ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

 

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இன்று 14வது நாளாக அமலில் உள்ளது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன.உற்பத்தி தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் ஜவுளி, இரும்பு, உரம், சிமெண்ட், சர்க்கரை, காகிதம், டயர் உள்ளிட்ட 13 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படுவதாகவும், குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தியை தொடரலாம் என தமிழக அரசுத் தரப்பில் ஒரு உத்தரவு இன்று மாலை வெளியானது. இதனால் இந்தத் துறை சார்ந்த நிறுவனத்தினரும், தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

ஆனால், இந்த அறிவிப்பு வெளியான அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழக அரசுத் தரப்பில் மற்றொரு உத்தரவு வெளியானது.13 வகையான உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கலாம் என வெளியான அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு மணி நேரத்தில் ஏன் இந்த குளறுபடியான உத்தரவுகள் என பலரும் குழப்பம் அடைந்துள்ளனர்.


Leave a Reply