--- --:--:-- --

கோடாங்கிபாளையம் ஊராட்சியில்  பொதுமக்கள் அழைப்பை அலட்சியப்படுத்தும் செயலாளர்  கவிதா !

j

 

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாரத்திற்கு உட்பட்ட கோடாங்கிபாளையம் ஊராட்சிப் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போயுள்ள நிலையில், அங்கு தலைவர்கள் இல்லாத காரணத்தால் மக்கள் பணிகள் அனைத்தும் ஊராட்சிச் செயலரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகின்றன.

 
வட்டார வளர்ச்சி அலுவலரின் (BDO) மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், தற்போதைய சூழலில் கோடாங்கிபாளையம் ஊராட்சிச் செயலர் கவிதா அவர்களின் தன்னிச்சையான போக்கால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

பொதுமக்கள் மன உளைச்சல்

கோடாங்கி பாளையம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு, தெருவிளக்கு பழுது, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட அன்றாட பிரச்சினைகள் குறித்து முறையிட பொதுமக்கள் ஊராட்சிச் செயலர் கவிதாவை தொடர்பு கொள்ள முயற்சித்தால், அவர் பெரும்பாலான நேரங்களில் பொதுமக்களின் அழைப்பை ஏற்பதே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்களுக்கு பணி  செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கும்   செயலர்  பொதுமக்களின் மொபைல் அழைப்புகளை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதால், அப்பகுதி மக்கள் தங்களின் குறைகளைக் கூடத் தெரிவிக்க முடியாமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

தன்னிச்சையான செயல்பாடு – தாமதமாகும் மக்கள் பணிகள்

ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் பிரதிநிதிகளான தலைவர்கள் இல்லாததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, செயலாளர் கவிதா அவர்கள் தனது விருப்பம்போல அலுவலகத்திற்கு வருவதும் போவதுமாக தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பொது மக்களின் தேவைகளுக்கு முதலிடம் கொடுக்காமல், அலட்சியப் போக்கைக் கடைப்பிடிப்பதால்  அடிப்படை வசதிகள் வரை அனைத்துப் பணிகளும் முடங்கி, பல மாதங்களாக தாமதமாகி வருகின்றன.

 

வட்டார வளர்ச்சி அலுவலரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும் இந்த ஊராட்சியில், நிர்வாகம் சீர்கெட்டுப் போயிருப்பதை உயர் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. உடனடியாக பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, மக்கள் அழைப்பிற்கு பதிலளிக்காத மற்றும் தன்னிச்சையாக செயல்படும் ஊராட்சிச் செயலர் கவிதா மீது உரிய விசாரணை நடத்தி, ஊராட்சி பணிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோடாங்கிபாளையம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon