எலும்பு வளர்ச்சி கால்சியம் சத்து குறைபாட்டினால் எலும்பு, பற்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். அவர்களுக்கு சாத்துக்குடி ஏற்றது. சாத்துக்குடியை தினசரி உட்கொள்வதன் மூலம் உடல் பலம் பெறுவதோடு எலும்பு வளர்ச்சியடையும். பசியை தூண்டும் வயிறு மந்தமாக பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் தினசரி இரண்டு சாத்துக்குடி சாப்பிட ஜீரணசக்தி அதிகரித்து பசி உண்டாகும்.
வயதானவர்களுக்கு உணவை செரிமானத்தை அதிகரிக்கும், மலச்சிக்கலை போக்கும் நினைவாற்றலை அதிகரிக்கும். மறதி நோயால் அவதிப்படுபவர்களுக்கு சாத்துக்குடி அருமருந்தாகும். தினசரி சாத்துக்குடி ஜூஸ் பருகி வர நினைவாற்றல் அதிகரிக்கும். நோயாளிகளுக்கு ஏற்றது. நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் இரண்டு வேளை சாத்துக்குடி சாறு பருகினால் புத்துணர்ச்சி ஏற்படுவதோடு, உடலுக்கு வலு உண்டாகும். சாத்துக்குடி ரத்தத்தில் எளிதில் கலப்பதால் விரைவில் உடல் நலமடையும்.
சோர்வைப் போக்கும் சிலர் எப்போதும் சோர்வாக இருப்பர். அசதியினால் தலைசுற்றலுடன் மயக்கம் ஏற்படும். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும். ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்தசோகையை போக்கும்.