வறட்சியை தாங்கி வளரும் பேரீச்சைகள்!

உலக அளவில் இங்கிலாந்து, கலிபோர்னியா , இஸ்ரேல், அபுதாபி ஆகிய நாடுகளில் மட்டுமே அதிக அளவில் பேரீச்சை உற்பத்தி செய்யபடுகிறது. இவை தாவரவியல் ஆய்வு கூடகங்களில் திசு மூலமாக உற்பத்தி செய்து பல்வேறு நிலைகளில் சுமார் 3 ஆண்டுகள் வரை ஆய்வகத்தில் வளர்க்கப்படுகிறது. பின்னர் சீதோஷ்ன நிலைக்கு ஏற்ப பக்குவபடுத்தி ஓராண்டு வரை பசுமை குடிலில் வளர்க்கப்பட்டு நன்கு திரட்சியான பிறகே செடிகள் விற்பனைக்கு வருகிறது.

 

அதை வாங்கி நடவு செய்த 2 ஆண்டுகளில் காய்க்க தொடங்கி விடும். தொடங்கியது முதலே ஆண்டிலேயே ஒவ்வொரு செடியிலும் முதல் 50 கிலோ வரை காய்க்கும். 3 ஆண்டு பருவத்தில் 100 கிலோ வரையும், 5 ஆண்டு பருவத்தில் 100 கிலோ முதல் 300 கிலோ வரை காய்க்கும் தன்மை உள்ளது. தர்மபுரி மாவட்டம் அரியகுளத்தை சேர்ந்த நிஜாமுதீன் என்ற விவசாயி இந்த பேரீச்சை உற்பத்தியில் தனி முத்திரையை பதித்து வருகிறார்.

 

இவர் பெரி, கண்ணிந்தி, அஜ்வால், ருஸ்,மிஜ்னாஸ்,கத்தாலி, கலாஸ், அலுவி, ஜகிதி,சிலி உள்ளிட்ட 32 ரக பேரீச்சைகளை சாகுபடி செய்வதாக கூறுகிறார். வளைகுடா நாடான சௌதி அரேபியாவில் 8 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வந்த நிஜாமுதீனுக்கு அங்கு விளையும் பேரீச்சையை சொந்த ஊரில் சாகுபடி செய்ய ஆசை.அதன் விளைவாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பேரீச்சை விதைகளை வாங்கி வந்து தனக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டார்.

 

அவை நன்கு வளர்ந்து தற்போது வரை லாபகரமான விளைச்சலை கொடுத்து வருவதாக கூறுகிறார் நிஜாமுதீன். மற்ற பயிர்களை விட சற்று கூடுதல் செலவு பிடிக்கும் பேரீச்சியை ஒரு முறை பயிரிட்டு விட்டால் , அதன் பின்னர் பல ஆண்டுகளுக்கு பன்மடங்கு லாபம் பார்க்கலாம் என்கிறார் நிஜாமுதீன். வறட்சி தாங்கி வளர்ந்து லாபம் தரும் பேரீட்சையை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.


Leave a Reply