பால்கனியில் தவறி விழுந்த கை குழந்தையை காப்பாற்றிய இளைஞர்

Publish by: --- Photo :


துருக்கியில் இஸ்தான்குல் மாவட்டத்தில் உள்ள ஃபட்டி எனும் நகரில் இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் குழந்தையை 17 வயது இளைஞர் ஒருவர் பாய்ந்து சென்று கைகளில் பிடித்து காப்பாற்றிய காட்சிகள் வெளியாகியுள்ளது. குழந்தை பால்கனியில் விளையாடும் போதே விழுந்து விடுமோ என்ற கவலையுடன் பார்த்து கொண்டிருந்த அல்ஜேரியா நாட்டவரான இளைஞர் தான் நிற்கும் இடத்தை அதற்கு ஏற்றவாறு அமைத்து கொண்டு குழந்தை விழும் தக்க சமயத்தில் பிடித்து கொண்டார். சிறு காயமும் இல்லாமல் குழந்தை உயிர் பிழைத்து கொண்டது.