2021இல் தனிநபர் குளிர்பானம் நுகர்வு அளவு இந்தியாவில் இரு மடங்காக அதிகரிக்கும்!

இந்தியாவில், வரும் 2021ஆம் ஆண்டில், தனி நபர் பருகும் குளிர்பானங்களின் அளவு, தற்போதுள்ளதை விட இரு மடங்கு உயரும் என்று ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

 

‘பெப்சிகோ இந்தியா’ நிறுவனத்தின் குளிர்பானங்களை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வரும் ‘வருண் பிவரேஜஸ்’ என்ற இந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அதில், இந்தியாவில், 2016 ஆண்டின் படி, ஒருவர், ஆண்டுக்கு சராசரியாக, 44 பாட்டில், பழரசம் உள்ளிட்ட குளிர்பானங்களை அருந்தி வந்துள்ளனர். இது, 2021ல், 84 பாட்டில்கள் அதாவது இரு மடங்கு அதிகரிக்கும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

கிராமப்புறங்களின் பொருளாதார முன்னேற்றம், பெருகும் நடுத்தர வர்க்கத்தினர், நவீன ‘பேக்கேஜிங்’ உள்ளிட்டவற்றால் இந்த முன்னேற்றம் ஏற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply