சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு இல்லை: அரசு திடீர் அறிவிப்பு

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், செல்வமகள் திட்டம் உட்பட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டியை குறைக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

 

சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது. நடப்பு 202-22 நிதியாண்டுக்கான முதல் காலாண்டு வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் அறிவித்தது. அதன்படி, சிறுசேமிப்பு திட்டங்களுக்கு 0.5 சதவீதம் முதல். சதவீதம் வரை வட்டி குறைக்கப்பட்டுள்ளது. பிபிஎப் திட்டத்தில் வட்டி விகிதம் 7. சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு பத்திரத்துக்கு வட்டி 5.9 சதவீதமாகவும் (பழைய வட்டி விகிதம் 6.8%) குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 

நடுத்தர மக்கள் பலருக்கு இந்த சிறுசேமிப்பு திட்டங்கள்தான் பிரதான முதலீடாக உள்ள நிலையில் அரசின் வட்டி குறைப்பு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.

 

இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுகிறது; ஏற்கெனவே இருந்த வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்துள்ளார். இது நடுத்தர, ஏழை மக்களிடையே நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்துள்ளது.


Leave a Reply