அம்மாபேட்டையில்  அனைத்து வணிகர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது!

ம்மாபேட்டை ஒன்றிய வணிகர்கள் சங்க கூட்டம்தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டம் ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்திற்கு மாவட்ட  தலைவர்  சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் செல்வம், வேலாசுந்தரராஜன்  ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.முன்னதாக ஒன்றிய செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது மே மாதம் 5ஆம்தேதி  சித்தோடு அருகே நடைபெற உள்ள 40 வது வணிகர் தின உரிமை முழக்கம் மாநாட்டில் நமது வணிகர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

இக்கூட்டத்தில் சரவணன், சம்பத்குமார், தைரியமணி முருகன் தங்கதுரை உட்பட ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர் முடிவில் பொருளாளர் ரமேஷ்(எ) கோவிந்தசாமி நன்றி கூறினார்.