உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கைக்கடிகாரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை அனுப்பியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
flipkart போன்ற e-commerce தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்திய பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்களை அனுப்பி வைப்பது அண்மைக்காலங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் வாடிக்கையாளர்கள் மேற்குறிப்பிட்ட e-commerce தளங்களின் மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். இந்தநிலையில் உத்திரப்பிரதேசத்தில் நீலம் யாதவ் என்பவர் கடந்த செப்டம்பரில் 28 தேதி பிளிப்கார்ட்டில் 1104 ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை ஆர்டர் செய்திருந்தார்.
அக்டோபர் 7ஆம் தேதி டெலிவரி செய்யப்பட்ட அந்த பார்சலை ஆர்வமாக பிரித்து பார்த்த போது அதில் மாட்டுச்சாணம் இருந்ததால் அவர் அதிர்ந்து போயுள்ளார். உடனடியாக ரிட்டன் செய்ததோடு தனது பணத்தையும் திரும்ப பெற்றார்.
மேலும் செய்திகள் :
வன அழிவை முன்கூட்டியே அறிவிக்கும் அனாவரன் திட்டம் முடக்கம்..!
மோடி ராஜினாமா செய்ய வேண்டும் - சுப்ரமணியன் சுவாமி
மார்ச் 14ம் தேதி பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம்..!
பிரதமர் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு..!
ஆதிக்க சாதியினர் பாலியல் வன்முறையை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்..!
பீகார் நிலை தமிழகத்திற்கும் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? திருமாவளவன்






