--- --:--:-- --

உடலுக்கு அழகு தரும் வாழைத்தண்டு மோர் கூட்டு

bghgj

தேவையான பொருட்கள்

நறுக்கிய வாழைத்தண்டு – 2 கப்,

வெந்த துவரம்பருப்பு – 1/2 கப்,
கடைந்த தயிர் – 200 மி.லி.

அரைக்க…

பச்சைமிளகாய் – 6,
தேங்காய்த்துருவல் – 1/2 கப்,
சீரகம், தனியா – தலா 1 டீஸ்பூன்.

செய்முறை :

அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து கொள்ளவும்.

கடாயில் வாழைத்தண்டு, உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு வேகவிடவும்.

வாழைத்தண்டு வெந்ததும் அதனுடன் வெந்த துவரம்பருப்பு, அரைத்த கலவை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி கலந்து பரிமாறவும்.
தாளிக்க…

தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள் – தலா 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon