முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.40 லட்சம் அபராதம்! அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா?

Publish by: --- Photo :


பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய குற்றச்சாட்டில் சிக்கிய முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்தி இயக்குநர் கரண் ஜோகர் வழங்கும் “காபி வித் கரண்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி வட இந்தியாவில் பிரபலமானது. சில மாதங்களுக்கு முன், இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் பங்கேற்றானர்.

 

அப்போது பெண்களை பற்றி சில அவதூறு கருத்துகளை கூறினர். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, தன்னுடைய பேச்சுக்கு இருவரும் மன்னிப்பு கோரினார். எனினும், இருவரும் சில போட்டிகளில் விளையாட தடை விதித்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

 

இந்தநிலையில் தற்போது, ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதத்தை விதித்து, பி.சி.சி.ஐ. உத்தரவிட்டுள்ளது. அந்த தொகையை, உயிரிழந்த 10 துணை ராணுவப்படை வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்க வேண்டும்; பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக மீத தொகையை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply