பேருந்து மேல் கூரை மீது ஏறிய இளைஞர்..!
மதுரை மாவட்டம் மேலூரில் பேருந்து மேல் கூரை மீது ஏறி இளைஞர் ஒருவர் ஏறியது பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது இளைஞர் ஒருவர் திடீரென ஏறினார்.
அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் பேருந்தை நிறுத்தியதில் அந்த நபர் கீழே விழுந்து சர்வசாதாரணமாக நடந்து சென்றார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவரின் பெயர் சதீஷ்குமார் என்பது மது போதையில் இருந்த அவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டதும் தெரியவந்தது.






