--- --:--:-- --

எகிப்து வெங்காயம் நோ டேஸ்ட்..? நோ யூஸ்..? – ரூ.70 ஆக விலை குறைந்தும் விற்பனை படுமந்தம்!!

1

எகிப்து நாட்டு வெங்காயம் வரத்தால், ரூ.70 ஆக விலை குறைந்த நிலையில் ருசியும் இல்லை… சமையலுக்கும் லாயக்கில்லை.. எனக் கூறி இல்லத்தரசிகள் பலர் எகிப்து வெங்காயத்தை வாங்க ஆர்வம் காட்ட மறுப்பதால் வியாபாரிகள் மிரண்டு போயுள்ளனர்.

 

வெங்காயம் விலை உச்சத்தை தொட்ட நிலையில், எகிப்தில் இருந்து இறக்குமதியான வெங்காயம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வரத்தொடங்கியுள்ளது. நேற்று திருச்சி, திண்டுக்கல் மார்க்கெட்டுகளில் எகிப்து வெங்காயம் ரூ 110-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சென்னை கோயம்பேடு, மதுரை, கோவை என தமிழகத்தின் பல நகரங்களுக்கும் எகிப்து வெங்காயம் மளமளவென வந்திறங்கியது.

 

மதுரை மார்க்கெட்டுக்கு மட்டும் இன்று 320 டன் வெங்காயம் வந்திறங்கியது. விலையும் கிலேர ரூ.70 என விற்கப்பட்டது. ஆனால் இந்த வெங்காயத்தின் நிறத்தைப் பார்த்தவுடனே இல்லத்தரசிகள் பலர் முகம் சுழித்து, ருசியே இருக்காது; சமையலுக்கும் லாயக்கு படாது எனக் கூறி வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் விற்பனை மந்தமானது கண்டு வியாபாரிகளும் கலக்கமடைந்துள்ளனர்.

 

இது குறித்து மதுரை வெங்காய வியாபாரி ஒருவர் கூறுகையில், எகிப்து வெங்காயம் ருசி குறைந்தது .இதனால் வீட்டு சமையலுக்கு லாயக்கில்லை என பொதுக்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஹோட்டல்காரர்கள் தான், விலை குறைவு என்பதால் விரும்பி வாங்கிச் செல்கின்றனர் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon