நாயை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு..!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மலைப்பகுதியில் நாயின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்குவதைப்பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த மலைப்பாம்பு நாய் இறந்த பின்பு அது உடலை வெளியே கக்கிய காட்சிகளை வெளியிட்ட தீயணைப்புத்துறையினர் அதனை வனப்பகுதியில் விட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





