திருத்தணி கோவிலில் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா..!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கோயிலில் பணிபுரியும் 12 ஊழியர்களுக்கு கொரொனா தொற்று உறுதியானதால் அவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்டியல் எண்ணும் பணியில் பங்கேற்ற உதவி ஆணையருக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையை உத்தரவின் பேரில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட 118 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன் அடிப்படையில் கோவில் பணியாளர்கள் கொரொனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கோயில் பணியாளர்கள் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





