இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையன் கைது..!
சென்னை தியாகராயநகரில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய கொள்ளையன் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தியாகராயநகர் மூசா தெருவில் செயல்பட்டு வந்த இருப்பு வைக்கும் அலுவலகத்தில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடந்த 21ஆம் தேதி நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படைகளை அமைத்து காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
ரகசிய தகவலின் பேரில் விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை அதிகாரிகள் கோடம்பாக்கத்தை சேர்ந்த மார்க்கெட் சுரேஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் வெங்கடேசன் என்ற கைது செய்த காவல்துறையினர் திருடப்பட்ட நகைகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.






