திருப்பூரில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் வைத்திருந்த நபர் கைது..!
திருப்பூர் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தம்பாளையம் டாஸ்மாக் பார் அருகே இன்று சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பெயரில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று , திருமுருகன்பூண்டி காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது லோகேஷ்(26) என்ற நபர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத்தொடா்ந்து அவா் மீது வழக்கு பதிவு செய்து போலீசாா் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 180 ML அளவுள்ள 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




